கடமை தவறாதவர்களைப் பாராட்டி அவர்களின் நல்ல செயல்பாடுகளை ப் பயன்படுத்திக்கொள்ளுதல் மனித இனத்துக்குத் தேவையானது என்பதை சொல்லவேண்டுவதில்லை. இப்படிக் கடமை தவறாதோரின்
பட்டியலில் சனிக்கிரகம் முன் நிற்கின்றது. கிரகம் என்ற சொல்லை முன் இவண் விளக்கியுள்ளோம்.
படைத்த சிவனாரையே பற்றிக்கொண்டு தன் கடமையை ஆற்றியதால், சனிக்கு ஈஸ்வரப் பட்டம் என்பார்கள். ஈஸ்வரன் என்ற சொல்லுக்கு விளக்கமும் இங்குக் காணலாம்.
அவற்றுக்கான தனி இடுகைகளைக் காண்க.
சனி என்பவனே ஒரு தனித்தன்மை வாய்ந்தவன். ஆதலின்
தனி என்ற சொல்லினின்று சனி என்ற கோட்பெயர் அமைக்கப்பெற்றது. தகரத்துக்குச் சகரம் ஈடாகுமிடங்கள்
தமிழில் உண்டு. தங்கு > சங்கு என்பது காண்க. தன் என்பதன்
பன்மையாகிய தம் என்பதும் தம்முடன் பிறரும் கூடியிருத்தலைக் குறிப்பது மறத்தலாகாது. வேறு சில மொழிகளில் த என்பது ச என்று ஒலிக்கப்பெறுதலும் உண்டு. ஒத்மான் என்பது ஒஸ்மான் எனப்படுதல் காண்க. உலக மொழிகளை ஆராய்ந்தால் இவ்வுண்மை புலப்படும். யாப்பில் த என்னும் எழுத்துக்குச் ச மோனையாகிவருதலும் உண்டு.
சனி மெதுவாக நகரும் கிரகம் என்பர். அதனால் அவனுக்கு
"மந்தன்" என்ற பெயரும் சொல்வர். மந்தமாவது, விரைவுக்
குறைவு. சனி பிடித்துள்ளதாகக் கூறப்படும் காலங்களில் விரைவாக எதையும் நீங்கள் செய்து முடிக்க இயலாது என்பர். ஓர் இராசி வீட்டைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வான் சனி. இதைச் சோதனை செய்ய, சனி பிடித்த காலக்கட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுடைய முக்கிய வேலையை மேற்கொள்ளுங்கள். தடை, தாமதம் இருக்கின்றனவா என்று அறிந்து மகிழலாம்.
குப்பைத் தொட்டி. குப்பை போடுதல் தொடர்பாக ஏதேனும் தகராறுகள், அழைப்பாணை வந்தால், சனி எந்த இராசியில் இருந்து என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று ஆய்வு செய்வது நலம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.