Pages

திங்கள், 15 மே, 2017

உவமை உவமானம் உவமேயம்

உவமை என்பது தமிழ். ஆனால் உவமானம் உவமேயம் என்பன‌
பற்றிச் சிலருக்கு ஐயப்பாடு உள்ளது.

உவமை + ஆன +  அம்( விகுதி )   : உவமானம்.

அதாவது, உவமைதான் உவமானம்.  இந்தச் சொல்லில்,  "ஆன"என்ற சொல் வந்து,  புணர்ச்சியால் மான என்று தோன்றுகிறது.  இதில்
மானம் ஒன்றுமில்லை. கற்பனையாக, உவமிக்கப்படும் பொருளின்
அளவு (மான ) என்று சொல்லலாம். இதிலொரு புதுமை இல்லை.

பெண்ணுக்கு உவமை மயில். அதுவே  உவமை.  உவ  என்பது
உ என்னும் சொல்லிற் பிறந்தது. முன் நிற்பது என்று பொருள்.

உவமையிலிருந்து நோக்க, அதனோடு ஏயது : பெண். இதில் பெரிய‌
செய்தி ஒன்றுமில்லை. மயில்போலும் அழகுடையாள் என்பது
ஒரு கருத்து. ஆடவன் மனமிக மகிழ்ந்து பெண்ணை மயில் என்கிறான்.  அவள்  ஆடும் அழகு,  மயில் போன்றது என்பது கருத்து. உருவொற்றுமை ஒன்றுமில்லை.

அதிலும், ஆய்மயிலாக இருத்தல் வேண்டும், எல்லா மயிலும்
அல்ல.  "அணங்குகொல், ஆய்மயில் கொல்லோ?" தேர்ந்தெடுத்த‌
மயிலே பெண்ணுக்கு ஒப்பு.

உவமை + ஏய + அம் = உவமேயம், இது உப என்று திரிந்து,
உபமேயம் என்றுமாகும்.  வ > ப திரிபு. உவமையோடு  இயை  பொருள். இங்கு பெண் ஆவாள்.

ஏய ‍ இயைய.

இவற்றைத் தமிழ்க்கண்ணாடியால் பார்த்தால், இந்த உண்மை
புலப்படும்.

தமிழில்  பொருள் சொல்ல இயலாதவிடத்தன்றோ  இந்தோ ஐரோப்பியத்தை  நாடவேண்டும் ?   இங்கு அது தேவையில்லை.  மற்றும் சமஸ்கிருதத்துக்கு
இலக்கணம் வகுத்தவன்  ஒரு தமிழ்ப் பாணனாகிய "பாணினி". ( பாண் +இன் + இ )..

ஆரியன் என்பதும் தமிழ்ச் சொல் .  வெளி  நாட்டார்  வந்துள்ளனர்.
அவ்வப்போது.!!   அவர்கள்  "ஆரியர்"  அல்லர்.  சமஸ்கிருதம்  இந்திய  மொழி.
அதிலிருந்து  சொற்களை  மேற்கொண்டு பயனடைந்தோர் பலர்  பன்மொழியினர் ..


உவ + ம் +  ஐ ‍=  உவமை.
உவ + ம் + ஏய + அம்  =  உவமேயம்,
உவ + ம்  + ஆன + அம் =  உவமானம்,

உவமானம் என்பது உண்மையில் ஓமானம் என்ற சிற்றூர் வழக்கு, புலவர் இதனை மேற்கொண்டு, உவமானம் > உபமானம் ஆக்கினர்,

உவமை என்பது இலக்கிய வழக்கு,.

உவமேயம் என்பது புலவர் புனைவு. இயைதல், ஏய்தல் என்பன‌
சிற்றூரார் வழங்காதவை என்று தெரிகிறது.

ஆன, ஏய என்பனவற்றை எச்சங்களாகக் காட்டாமல் வினைப்பகுதிகளுடன் இணைத்துக்காட்டலாம்.  வேறுபாடில்லை.

உவ+ மெய் என்று காட்டுவது பேரா மு வரதராசனார் கொள்கை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.