Pages

திங்கள், 1 மே, 2017

துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும். ......

மகிழ்சியும்  துன்பமும் மாறிமாறி வருகின்றன.

எதில் மகிழ்ந்தோமோ,  அது கொண்டே துன்பமும் வந்துவிடுகின்றது.  துன்பம்
என்பது தனியே வருவதில்லை.

ஒரு சொந்தக்காரப் பையன் என்னுடன் மகிழுந்தில் பயணிக்க
வேண்டும் என்று மிக்க ஆசையுடன் என்னோடு வந்தவன்.

ஓரிடத்தில் மகிழுந்தை நிறுத்தியபோது கொஞ்ச தொலைவில்
ஒருவன் எதோ ஒரு தின்பண்டத்தை விற்றுக்கொண்டிருந்தான்.

என்னுடன் வந்த பையனுக்கு அதை வாங்கித் தின்னவேண்டும்
என்ற தாங்க முடியாத ஆசை. ஆசையை எப்படி அடக்குவது?

இதற்காக புத்தர்மாதிரி துறவு மேற்கொள்ள வேண்டுமா என்ன
அக்காள் வாங்கிக்கொடுப்பாள் என்று பையன் எதிர்பார்க்கிறான்.

உடனே அவனிடம் ஒரு பத்துவெள்ளியைக் கொடுத்து, அதை
வாங்கிச் சாப்பிடு என்று சொன்னேன். துறவு மேற்கொள்ளாமலே ஆசை தீர்ந்துவிடும்.

அவனைப் பார்க்கவேண்டுமே!  வண்டியிலிருந்து இறங்கி, காசைக் கையில் பிடித்துக்கொண்டு  தாவிக்கொண்டும் குதித்துக்கொண்டும் அங்கே ஓடினான்.

அதைப் பார்த்த மன நிறைவுடன் நான் வேறு சிந்தனையில்
ஆழ்ந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் பையன் அழுதுகொண்டு வந்தான். "என்ன. என்ன, யாரும் அடித்துவிட்டார்களா......."

"பத்துவெள்ளியைக் காணோம்"  என்று அழுதான்.

"சீ!  அழாதே...... அக்காள் இருக்கிறேன். " என்றபடி என் பையை
எடுத்து, இன்னொரு பத்துவெள்ளியைக் கையில் கொடுத்து, "ஆடக் கூடாது, குதிக்கக் கூடாது, கவனத்துடன் நடந்து போ. சாலையில் பல உந்துவண்டிகளும் மனிதர்களும் போகிறார்கள்.
யாருக்கும் இடைஞ்சல் உண்டாகாமல்  போய் வாங்கிச் சாப்பிடு. விழுந்துபோன காசு போகட்டும். இந்தக் காசு காணாமற் போய்விடாமல் பார்த்துக்கொள்..."  என்று சொல்லி அனுப்பினேன்.

ஒழுங்காகப் போய் வாங்கிக்கொண்டு வந்து, என் எதிரிலேயே
சாப்பிட்டு முடித்தான்.  "கவலைப் படாதே.....எதையும் சாதிப்பதுதான் முதன்மையானது என்று  திடமுறுத்தினேன்.

மகிழ்வும் துன்பமும் ஒரு பத்துவெள்ளிக்குள்ளேயே சுற்றிவருகிறது.  அதுதான் நாம் வாழும் மனித வாழ்க்கை. தனியாக ஏதும் துன்பம் தோன்றுவதில்லை. எல்லாம் உன்னிலிருந்தே உள்பற்றி வருகிறது.  (உள்பற்றி > உற்பத்தி ).

அரசியல் மேதை திரு லீ குவான் அவர்கள் கூறிய ஒரு
சீனக் கதை நினைவில் வந்து மோதுகின்றது. ஒரு சீனச் சிற்றூரான்  தன் மகனுக்குக் குதிரை வாங்கிக் கொடுத்த கதை. ஒரு குதிரையை வைத்தே இன்பமுன் துன்பமும் மாறிமாறிச் சுழல்கின்றன என்பதை அவர் பட்டியலிட்டுக் காட்டினார். அதை இன்னொரு நாள் அறிந்து இன்புற்றிடுவோம்.

will edit.
This story is from my diary in November 2014.  At that time I also analysed the word munthAnAL.
We shall discuss in another post. Pl stay tuned.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.