இனி, உவச்சன் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.
இச்சொல் ஓச்சன் என்றும் வழங்குகிறது.
இந்த இரு வடிவங்களுள் எது முன் அமைந்தது என்று காணவேண்டும்.ஆனால் இதைத் தீர்மானிப்பது கடினமே.
இதற்குள் புகுந்து இடர்ப்படாமல், இரண்டையும் முதலாகக் கொண்டு
ஆராயலாம்.
உவச்சன் என்பதை உவ + அச்சன் என்று பகுத்துக் காணின், உவ =
முன் நிற்கும்; அச்சன் = ஐயன்; தந்தை போன்றவன் என்று பொருள் வரும். உவ+அச்சன் = உவச்சன்; இங்கு ஓர் அகரம் கெட்டது. உவ என்ற (சுட்டடிச் ) சொல்லின் இறுதி அகரம் கெட்டதா? அன்றி, அச்சன் என்பதன் தலை அகரம் கெட்டதா என்று ஆராய்தல் தேவையில்லை.
அதைப் பண்டிதன்மாருக்கு விட்டுவிடுவோம்.
இனி ஓச்சன் என்பதை முந்து வடிவாகக் கொண்டு, ஆய்வு நிகழ்த்தலாம். ஓச்சுதல் என்றால் : எறிதல், ஒட்டுதல், செலுத்துதல், உயர்த்துதல், ஓங்குதல், பாய்ச்சுதல், மற்றும் வீசுதல் ஆகும். எனவே இறைவனை, இறைவியை உயர்த்திப் பாடுதல், ஓசைப்படுத்தல் என்பதாம். ஓசு என்ற
என்ற வடிவம் ஓச்சு என்பதன் இடைக்குறை . இது பெயர்ச்சொல்லாக,
கீர்த்தி (சீர்த்தி ), புகழ் என்றும் பொருள். ஓ > ஓசு > ஓசை என்பதும்
கருதத்தக்கது.
ஓச்சர் என்பார் பிடாரி கோயிற் பூசாரிகள். அவர்கள் ஒரு குலமாகச்
செயல்பட்டுத் தொழிலீடுபாடு கொண்டிருந்தனர். பிடார் என்ற சொல்லுக்குப் பீடு பெருமை என்பது பொருள். இது பீடு + ஆர் + அன் என்று உருவாகி, பீடாரன்> பிடாரன் என்று குறுகி அமையும் சொல்.
பெருமையுடையோன் . இது பாம்பு பிடிப்போன், குறவன், வைத்தியன்
என்று குறிக்கும். பாம்பு பிடிப்பது, ஓர் அசத்தும் தொழில். வைத்தியமும்
இன்றியமையாத தொழிலே.
எனவே பிடாரி ( பீடுடைய பெருமாட்டி ) என்பது ஒரு சிற்றூர்த் தெய்வம். இங்குப் பூசாரிகளாக வேலை செய்தோர் உவச்சர்கள் அல்லது
ஓச்சர்கள்.
கம்பர் பெருமான் உவச்சர் அல்லது ஓச்சர் குலத்திற் தோன்றியவர். பிடா ரி
வழிபாட்டினர் இராம பத்தர்களாயும் இருந்தனரா என்று தெரியவில்லை. கம்பர் இராம பத்தப் பாடுநரானது மேலும் ஒரு காவியத்தைத் தமிழுக்களித்தது
----------------------------------------------------------------
பீடு என்பதன் அடியாகத் தோன்றிய ஒரு தொன்மச் சொல் பீஷ்மன் என்பது என்று முன்னரே இடுகை தந்துள்ளோம்.
பீடு+ மன் = பீடுமன்; இயல்புப் புணர்ச்சி. பீடு= பெருமை; மன் = மன்னன். ஆகவே பெருமைக்குரிய மன்னன். காரணப் பெயராகிறது. இது டுகரத்தைக் களைந்த நிலையில் ஷ் என்ற எழுத்து நுழைக்கப்பட்டு, பீஷ்மன் ஆகும். ஓரெழுத்து மாற்றத்திலே சொல்லை அமைத்தது திறனே ஆகும்.
புதிய சொற்களை எப்படி அமைப்பது என்பதைப் பெரும்புலவன் வால்மிகி
யிடத்து ம் மற்றும் வேத வியாசனிடத்தும் கற்றுக்கொள்ளவேண்டும்.
.You may refer to other works on the history of uvachchars. We are only concerned here with word
derivation.
Edited.
Edited.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குகாளி பிடாரியை வனங்குபவர்கள் நாடார்களே...
பதிலளிநீக்குநாங்கள் பிடாரி காளி கோவிலுக்கு பூஜை செய்பவர்கள் உவச்சர்
நீக்குஓம் அட்சகர் உவச்சர், கமலமுனி4000வருடம் , கம்பர்ஐயா,அஷ்தநட்சத்திரம், கன்னி ராசி வைகாசி24ம் தேதி பிறந்தார், காளிகோவில் பூசைசெய்யும் வகுப்பினர், பாரசைவகோத்திரம், மிகவும் அரிதான குறுகிய சமுதாயம், நன்றி
பதிலளிநீக்குதங்களுக்கு எங்கள் நன்றி.
பதிலளிநீக்குகம்பர் பெருமான் பற்றி நீங்கள் அறிந்தவற்றை இன்னும் பின்னூட்டம் இடலாம். இப்பெருங்கவிபற்றி நாம் அறியாதவை பல உள்ளன என்பது தெளிவு. தயங்காமல்
உரையிடுங்கள். தமிழுலகு பயன்பெறும்.
வணக்கம்
பதிலளிநீக்குகாளிகார்பனமஸ்து
உவச்சர் என்பவர் ஆதி கால கட்டத்தில் இருந்து காளி கோவில் பூஜை திருவிழா கும்பாபிஷேகம் பரிகாரம் மாந்ரீக தாந்த்ரீக காளி பூஜைகளை செய்து வருகிறார்கள் அதாவது காளி கோவில் குடியுரிமை பெற்றவர்கள் இவர்களில் பாரசைவர் வல்லவராயர் பல்லவராயர் சல்லியராயர் பட்டர் போன்ற பட்டங்கள் இட்டு கொண்டு இன்று பூஜைகளை நடத்தி கொண்டுதான் இருக்கின்றனர்
உவச்சர் குல பாரசைவர்கள் ஆதி கால கட்டத்தில் இருந்து காளி கோவில் பூஜை புனஸ்காரங்களை செய்து வருகிறோம் என்பதற்கு பல ஏட்டு சுவடிகள் எங்களிடம் ஆதரவு இருக்கிறது அந்த ஏட்டு சுவடிகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி
சர்வேப்யோ பாரிசைவேப்யோ நமக