இரக்கம் > ரக்க > ரக்ஷ. பொருள்: இரக்கம்.
இகம் (இ(வ் வுல) கம்) > ஜெகம்.
அம்மா, தாய் > ~மா + தா~ = மாதா.
ஜெகம்+ மாதா = ஜெகன்மாதா.
அம்மா என்பதில் "மா" மட்டும் எடுக்கப்பட்டது; தாய் என்பதில் "தா " மட்டும் வந்து சேர்ந்து கொண்டது. ஆகமொத்தம்: மாதா ஆனது. அருமையான புனைவு ஆகுமிது.
ஒப்பு நோக்குக: ஆய் + தாய் = ஆ +தா = ஆத்தா.
ரக்ஷ ரக்ஷ ஜெகன்மாதா = இரக்கமுடைய உலகத் தலைவியே.
பழந்தமிழ்ச் சொற்கள் அழகாகச் செதுக்கப்பட்டு, புதிய சொற்கள்
படைக்கப்பட்டன.
ரக்ஷகர் : மனமிரங்கிக் காப்பாற்றுகிறவர். (ஏசுநாதருக்கு வழங்கும்
பெயர்.)
ஒரு மொழியை வளப்படுத்த எம்முயற்சியும் நன்முயற்சியே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.