அந்தம் என்ற சொல் பற்றிச் சிந்தனையைச் செலுத்துவோம்.
இதை அறிந்துகொள்ள நாம் இன்னொரு சொல்லினைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அச் சொல்: " அன்றுதல்" என்பது. இதன்
பொருள் யாது என்பதை நாம் அகரவரிசைகளிலிருந்து அறிந்து கொள்வோம். இதன் பொருள்: மாறுபடுதல், கெடுதல், கோபித்தல், பகைத்தல் என்பன.
இது ஒரு சுட்டடிச்சொல். இ என்கின்ற இவ்விடத்திலிருந்து தொடங்கிய
ஒன்று, அ என்னும் அவ்விடத்துச் சென்று முடிந்துவிடுகின்றது. அவ்விடத்து முடியுமுன் அவ்விடத்தை "அடுத்துச்" செல்கிறது; அப்புறம்
முடிகிறது. இதுகண்ட தமிழர், அணுகுதல், அடுத்தல், அன்றுதல் முதலிய சொற்களை அ என்ற சுட்டடியிலிருந்து உருவாக்கிக் கொண்டனர். இவை மூன்றும் உதாரணங்களே; இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன. (உது + ஆர்(தல்) + அணம் : உதாரணம், அணம் விகுதி).
அன்றுதல் : இதைப் பகுத்தால், அன் + து + தல் என்று பிரியும். இவற்றுள் அன் என்பதே முதனிலை அல்லது பகுதி; பிற விகுதிகளே.
அன்+ து = அன்று ஆயிற்று.
அன்று என்ற சொல் முடிந்துபோன நாளைக் குறிக்கிறது. அன்று அலர்ந்த
செந்தாமரை என்ற தொடரில் அன்று என்பது முந்தாநாளுக்கும் முந்திய
நாளைக் குறிக்கிறது. முந்தா = முந்திய. முந்தாத என்று பொருள்படுகிற
முந்தா வேறு.
அன்று என்பது வினைச்சொல்லாகி, (அன்றுதல் ஆகி), முடிதல் என்றும்
பொருள்.
அன்று என்பதை, அன்+து என்று கண்டோம். இதையே அந் + து என்றும்
எழுதலாம் ; எழுதின் அந்து ஆகும். அந்து என்பதும் முடிவு குறிப்பது.ட்
அந்து : நெல்லை அழிக்கும் (முடிக்கும்) ஒரு பூச்சி.
அந்தி : பகல் முடியும் நேரம்.
அந்தில்: அவ்விடம் (இங்கு சுட்டடிப் பொருள் மாறவில்லை)
அந்தரி: முடித்துவைப்பவள்; தேவி.
அந்தரித்தல்: கெட்டொழிதல்.
அந்தன் : யமன்; உயிரை முடிப்பவன்; பார்வை முடிந்துபோனவன்.
அந்திய காலம் : முடிந்துபோகிற காலம்.
அந்தியர்: தங்கள் மேன்மை முடிந்து கீழ்மக்கள் ஆனவர்கள். அரசு வீழ்ந்தோர்.
அந்திரன்: தேவன். மேலிறுதியில் உள்ளோன்.( இறுதி இருபக்கம்
அன்றோ!)
இப்படிச் சொற்கள் பல.
இப்போது சிவனை மறக்கலாகுமோ? அவனே எல்லாவற்றுக்கும் தொடக்கமும் இறுதியும் ஆனவன். அவனை:
அந்திவண்ணன்
என்போம். யாவற்றுக்கும் முடிவானவன்; முடித்து வைப்பவன்; அந்தியின் நிறமே அவனுக்கும் நிறம்; சிவப்பு; சிவன்.
சிவந்தான் என்பது அவன் பழைய பெயர்.
இனி,அந்தம் என்பது தெளிவோம்.
அன்+து+ அம் = அந்தம். இது ஒருவகை மெலித்தலில் மெலித்தல்
ஆகும்.
வல்லொலி யாகிய றகரத்தை எடுத்துவிட்டு, தகரத்தைப் போட்டால்
அந்தம் என்றாகிறது.
தகரமும் வல்லொலி ஆயினும், நகர ஒற்றுடன் கூடி, தன் வன்மையை
இழந்துவிடுகிறது.
முன் தி : முந்தி; பின் தி : பிந்தி ; இன் து : இந்து என்பன காண்க.
இந்து: நிலா; இனியதாகிய நிலா. இன் = இனிமை; து: விகுதி.
"இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை!!"
இங்ஙனமே அன் து என்பது அன்று என்றும் அன் து அம் என்றுகூடி அந்தம்
எனவும் வந்து மகிழ்விக்கின்றன.
previous post on topic lost.
cursor jumps - noted. will edit.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.