இன்று நாம் ஆய்ந்தறியவிருக்கும் சொற்கள் அகர இகரச் சுட்டுச் சொற்கள். இவை ஒரு பொருளனவல்ல ஆயினும் இவற்றிடைப் பொருள் நெருக்கம் உளவென்பதைச் சற்று விளக்குவோம்.
இடி : அடி.
இடிப்பது வேறு; அடிப்பது வேறு. எனினும் இரண்டும் மோதுதலே. நுட்ப
வேறுபாட்டினவாம்.
இகலுதல் : அகலுதல்.
இகலுதல் என்பது வேறுபடுதல். எனினும், பகையுணர்ச்சியால் அவ்வாறு வேறுபடல். அகலுதல், நீங்கிச் செல்லுதல், ஆனால் இதில்
பகையுணர்ச்சி இருந்தும் இல்லாமலும் இருக்கக்கூடும்.
இணைதல் : அணைதல்.
இரண்டும் ஒன்றுசேர்க்கையாகும். பெரும்பாலும் இரண்டு இணைதல் அல்லது சேர்தல். அணைதல், நீர் கரையை அணைதல்; காதலால்
ஒருவரை ஒருவர் அணைதல் அல்லது அணைத்தல் எனப் பலவகை.
இடுதல் : அடுதல்,
இடுதல் என்பது வைத்தல்; அடுதல் என்பது நெருப்புவைத்தல். அடுத்தல் என்பது நெருங்குதல். இவைமூன்றும் நெருங்கினாலே
செய்ய ஒண்ணுபவை.
இவற்றிலுள்ள பொருள் அண்மைநிலையைக் கருத்தில் கொண்டு
சில்,> சல் > சன் என்பவாகிய அடிச்சொற்களிலிருந்து பிறப்பிக்கப்பட்டுள்ள சொற்களை அடுத்து ஆய்வுசெய்வோம்.
தயாராகுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.