ஈட்டி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
இதன் அடிச்சொல் இடு என்பது. இது பலபொருளுடைய சொல். இதன்
பொருளாவன: அணிதல், (பிச்சை முதலியன ) ஈதல், எறிதல், சொரிதல், வைத்தல் என்பன.
"இட்டார் பெரியார்" : ஈதல் செய்தவரே பெரியோர்.
பொட்டு இட்டுக்கொண்டாள் : இங்கு அணிதல் பொருள்.
இதைப் பெட்டியிலிட்டுப் பூட்டு: வெறுமனே வைத்துப் பூட்டுக என்பது.
எறிதல் என்பதும் பொருளாதலின், இடு + இ = இட்டி என்றும் ஈட்டி
என்றும் வரும். பின்னது முதனிலை திரிந்த தொழிற்பெயர். இகரம்
ஈகாரம் ஆனது. கெடு > கேடு என்பதும் முதனிலை நீண்ட தொழிற்பெயர். கேடு + இ = கேடி என்று போக்கிரியைக் குறித்தது.
இட்டி என்பது உலக வழக்கில் இல்லை. செய்யுளில் வந்தவிடத்துக்
காண்க. ஈட்டி என்பதே உலகவழக்குச் சொல்.
ஈட்டுதல் (சம்பாதித்தல் ) என்பது வேறு சொல் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.