பூத்தல் என்பது, பலரும் அறிந்த பொருள், "பூ மலர்தல்".
ஆனால் இச்சொல்லுக்கு வேறு பொருள்களும் உள்ளன:
தோன்றுதல், பயன் தருதல், அழகாகுதல், பருவம் எய்துதல் என்பன.
இவற்றுள் தோன்றுதல், முன்மைவாய்ந்த பொருளாம்,
புவி அல்லது இவ்வுலகம் தோன்றியது என்பதே பலரின் எண்ணமாகும்.
தமிழரின் எண்ணமும் அஃதே.
மண் தோன்றி... என்பதைக் கேட்கையில், இம்மண் தோன்றியதென்பதே
நம் அறிவு நமக்குச் சொல்வது : தோன்றிய ஞான்று நாம்
இல்லை எனினும்.
பூ > பூவுலகு. ( பூ+ உலகு).
பூ > பூமி. ( இங்கு "ம்" இடைநிலை).
(இவ்விடைநிலை உம் என்பதன் தலைக்குறை.)
பூ > பூவனம் > புவனம்.
( பூ = தோன்றிய; வனம் = அழகுள்ளது ).
( வல்>வன்; வன் > வனை> வனைதல்; வன்> வனம் ).
வனப்பு = அழகு. வல்> வல்லி : பெண்,அழகி.
இவ்வோர்பும் ஏற்புடைத்தே:
பூவு> பூவு+அன்> அம் > பூவனம்; . புவனம்.
நெடில் குறுகுதல் பல சொற்களில் வரும்.
பூ > பூவி > புவி . (தோன்றியது .) வி : விகுதி.
சாவு > சவம் எனக் குறுகுதல் காண்க.
இவற்றை ஆய்ந்து தெளிக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.