தியானம் என்பது ஒரு குறித்த பொருளின்மேல் மனத்தை நிலைநிறுத்துதல் ஆகும். அப்பொருள் இறைவனாகவே
பெரும்பாலும் இருக்கும்.
பெரும்பாலும் இருக்கும்.
இதற்கு இடையில் இன்னொரு பொருளை உதவியாக வைத்துக்கொள்ளலாம். அந்த உதவிப்பொருள், இறைவன்பால் மனம்
செல்லுதலை எளிதாக்குகிறதென்று உணரப்படுகிறது. இடைப்பொருள்
இருக்கலாகது என்பதொரு வாதம். இடைப்பொருள் வைத்து வெற்றி
கண்டோர் உளராதலின், அது இருத்தலாகாது என்பது முற்றிலும்
ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை.
தொடக்கத்தில் இடைப்பொருளாகப் பலரும் தீயையே தேர்ந்தெடுத்தனர்.
ஒரு விளக்கைக் கொளுத்திவைத்து, தீபத்தை நோக்கி, இறைவனை
எண்ணினர். சில மணி நேரம் இப்படி மனம் நிலைநிறுத்தம் பெறவே
தியானம் வெற்றியடைந்ததாகக் கொண்டாடினர்.
கோயிலில் விளக்கேற்றும் வழக்கம் இதனாலேயே ஏற்பட்டது. ஓமம் (தீ )
வளர்த்தும் மனம் ஒருநிலை அடைந்து இன்புற்றனர்.
ஆகவே "தீயான் இயைத்தல்" ஒர் முன்மைக் கொள்கையாய் ஆயிற்று. ஏதேனும் ஒருவகையில் தீயின்றி இறைவணக்கம் நடை
பெற்றது குறைவு.
தீ - மனத்தை இறையுடன் இயைக்கப் பயன்பட்ட இடைப்பொருள்.
தீயான் இயைத்தல் > தீயானியைத்தல் > தியானித்தல்.
தியானி > தியானம்.
நீரும் பூவும் என வேறு இடைப் பொருள்களும் உள . நீரிலிருந்து நீராயினன் > நாராயணன் என்பதும் பூ என்பதிலிருந்து பூசை (பூஜை) என்பதும் ஏற்பட்டன .
தீ யால் = தீயான் ( ஆல் = ஆன் வேற்றுமை உருபுகள் )
நிகழ்ந்த திரிபுகள்:
தீயானியைத்தல் >
தியானியைத்தல் ( முதல் எழுத்து குறுகிற்று )
தியானித்தல் ( யை கெட்டது , அல்லது மறைந்தது ).
தியானி ( ஒரு வகையில் இது ஒரு போலி வினைச் சொல் )
தியானித்தல் ( பின் உருவான வினைச்சொல் )
தியானி + அம் - தியானம் .( தொழிற்பெயர் )
தியானம் > தியான ( பிறமொழித் தாவல் )
இச் சொல் "தீப்" பொருளை இழந்து இதுகாலை பொதுப்
பொருளில் வழங்குகிறது )
பொருளில் வழங்குகிறது )
Posted without further elaboration. This may be in danger of getting deleted externally. Hence we post first.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.