நான் ஒரு குழும்பில் (கம்பெனியில்) பெரியவன், என் குழும்புக்கு வருமான வரி அதிகாரிகள் வருவர் என்று எதிர்பார்க்கிறேன்; அவர்களை இங்கு அனுப்பும் அரசியல் தலைவரை அதனால் எனக்குப் பிடிக்கவில்லை; அவருக்கு ஆப்பு வைக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனது நாட்குறிப்பில் அவருக்குப் பணம் கொடுத்ததாகவும் இன்னும் வேறுபலருக்கும் பணம் கொடுத்ததாகவும் எழுதி வைத்துவிட்டு, மறுவேலைகளைக் கவனிக்கிறேன்.
எதிர்பார்த்ததுபோல, வருமான வரி அதிகாரிகள் வந்து பலவற்றையும்
தேடும்போது அந்த நாட் குறிப்பும் அவர்கள் கையில் சிக்குகிறது. எழுதிய
நான் முன்னணியில் நிற்கவில்லை. நான் வெளியில் வந்து எதையும்
சொல்லாவிட்டாலும், நான் சொல்லவிழைந்ததை என் நாட்குறிப்பு
சொல்கிறது.
எனது நாட்குறிப்பு அந்த அரசியல் அதிகாரி ஊழல் புரிந்ததாகப் பொருள்படாது.
சிந்தித்துப் பாருங்கள்: என் நாட்குறிப்பில் நான் எதை வேண்டுமானாலும்
எழுதிவைத்துக்கொள்ளலாமே! நான் வாயால் பொய் அல்லது மெய் சொல்வதற்கும அதை நானே எழுதி என் அறையில் போட்டுவைப்பதற்கும் என்ன வேறுபாடு? என் நாட்குறிப்பை என் நினைவுக்கு உதவியாக நான் வைத்துக்கொள்ளலாம் அல்லது பயன்படுத்தலாம்.
மற்றபடி அது எப்படிச் சான்றாகும் என்பதை சட்ட நூல்களிலோ ஒரு
வழக்கறிஞரிடமோ கேட்டறிந்துகொள்ளலாம்.
மேலும் அறிய: :-
http://www.timesnow.tv/india/video/modiji-received-kickbacks-from-sahara-birla-when-he-was-cm-claims-rahul/53282
இதே சட்டம்தான் அமேரிக்கா இங்கிலாந்து ஏனைக் காமன்வெல்த் நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
நாட்குறிப்பில் உள்ள சான்று "கேல்விச் சான்று " ( Hearsay Evidene ).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.