Pages

செவ்வாய், 17 ஜனவரி, 2017

சாவிலிருந்துதான்.........ஜாதகம்

மனிதன் இறைவனனுண்மையைப்  பகுத்தறிந்ததும்  வழிபாட்டு முறைகளை உணர்ந்துரைத்ததும் சாவிலிருந்துதான். மரணமே இல்லையென்றால், இறந்தோனுயிர் எங்குச் சென்றதென்கின்ற கேள்வி
எழ இடமில்லை. இறப்பு ஒரு முடிவு போல் தோன்றுவதால் இறவாத‌
ஒருவன் இருக்கின்றானோ என்ற கேள்வியும், இறவாமல் இருந்துகொண்டுதான் அவன் இறப்புகளை ஏற்படுத்துகின்றானோ என்ற ஆய்வும் விளைகின்றன. அப்படிச் சென்றொழியாமல் நின்று நிலவுவோனை வணங்கினால் நன்மைகள் பல பெறலாம் என்கின்ற‌
கருத்தும் தோன்றுகின்றது.  அது நித்தியம் என்றனர். நில்+து+இயம் = நிற்றியம் > நித்தியம் > நித்யம் என்ற சொல்லும் உண்டாயிற்று. நித்தியமாவது, நின்று இயல்வதாகிய நிலை. இதைப் பிற  அறிஞர்களும் உரைத்துள்ளனர்.


எனவே சாய் ‍~ சா என்ற தமிழ்ச் சொற்களிலிருந்து சாய்தல் என்பதும்
சாதல் என்பதும்  ஆன  சொற்கள் உண்டாயின.  சாய்தல் என்பது பொதுப் பொருளிலும் இறப்பு என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கும், "வேரோடு சாய்ப்போம்" என்ற வழக்கையும் நோக்குக. மீண்டும் எழுந்துவிடாமல் அழித்தல் என்பது பொருளாம். போரில் சாய்ந்தான் என்றால் செத்துவிட்டான் என்று பொருள். நின்றுகொண்டிருப்பவன்    தி டீரெனச் சாய்ந்து இறப்பது உண்டென்பதால், சாய்தல் கருத்தில் சாதல் கருத்துத் தோன்றிற்று. சாய் என்பதிலுள்ள யகர ஒற்றுக் கெட்டுச் சொல் அமைந்தது.

சாய்தலும்  சாதலும் தொடர்புடைய சொற்கள் .

சாத்தியம் என்பது சாய்த்தல்  அடிப்படையில் எழுந்த சொல்லே.   இது முன் விளக்கப்பட்டுள்ளது.  இச் சொல்லில் ஒரு யகர ஒற்றுக்  கெட்டது . சாத்திரமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மனிதன் சாவின் தொடர்பில் தெரிந்துகொள்ள விரும்பியவற்றுள்  சாதகமும்
ஒன்று.  குழந்தை பிறந்தவுடன் இறப்பது infant mortality முற்காலத்தில் மிகுதி.
பிறந்த குழந்தைக்கு  ஆயுள் குறைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்பது தாய் தந்தை  உறவினர் இவர்களின் கவலை,பிறந்தது  சாவுக்குரியதோ ?   எனவே இதைக் கணித்தனர்,  சாவுக்குத் தகுவதோ  என்று பார்ப்பதே சா + தகு + அம் = சாதகம்
ஆனது, இப்பொருள்  நலமாகத் தோன்றாதபடியினால்  இது ஜாதகம் என்று மாற்றி  இடக்கர் விலக்கப்  பட்டது.   ஜா  = பிறப்பு என்று பொருள் கூறி  மரண எண்ணத்திலுருந்து  சொல் விடுதலை பெற்றது.

சொல்லுக்கு ஆக்கப்பொருள் நிறைவு அளிக்க வில்லை என்றால்,  அதைப் புலவர்  வேறு பொருள் குறி அழகுபடுத்தினர்.அபசகுனத்தை  ( கெடு  பொருள்)
விலக்குதல் நல்லது என்பது ஒரு மன்பதைக்  குறிக்கோள் ஆகும் .

This will be edited later as our draft went missing twice and had to be retrieved with some
difficulty.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.