ஆமைக்குத் தமிழில் வேறு பெயர் உண்டா என்று நீங்கள் வினவியதுண்டா ? ஆமை என்ற உயிரி வேறு; அறியாமை, ஒவ்வாமை, பொறாமை என்று ஆமையில் போய் முடியும் சொற்கள்
வேறு.பொறுமை மிக்கது ஆமை; அதற்கும் பொறாமைக்கும் ஒரு
தொடர்பும் இல்லை. முயலுடன் போட்டி போட்டு வென்ற புகழை
உடையது ஆமை என்பதும் நீங்கள் அறிந்ததே.
ஆமைக்குக் கடமம் என்ற இன்னொரு பெயருண்டு. மிக்கக் கடுமையான் ஓடுகளை உடையது ஆமை. ஆகவே அதற்கு மற்றொரு
பெயரை வைத்தவர்கள், கடு (கடுமை, கடியது) என்ற அடிச்சொல்லினின்றும் ஒரு பெயரை அமைத்தது மிக்க அழகிதே
ஆகும்.
கடு + அம் + அம்.
அம் என்ற இறுதியைப் பெற்ற இச்சொல், அம் என்பதே இடைநிலை
யாகவும் பெற்றுள்ளது. சில சொற்கள் ஒரே இடைச்சொல்லை விகுதியாயும் இடைநிலையாயும் பெறுதலுமுண்டு.
சில சொற்கள் எழுத்துமுறைமாற்றாக வரும். எடுத்துக்காட்டாக,
விசிறி என்பது சிவிறி என்று வந்து, பொருள் மாறுபடாமலிருக்கும்.
இந்தக் கடமம் என்ற சொல்லும், கமடம் என்று எழுத்து முறைமாற்றி
வருதல் உண்டு. சொற்களும்கூட இரட்டைவேடம் அணிதல் உண்டு.
இன்னொரு எ~டு: மருதை > மதுரை. மருத நிலங்கள் சூழ்ந்த
நகர் என்பது பொருள். இங்ஙனம் பல உள . முன் எழுதிய நினைவு இருப்பதால் தேடித் பார்த்தல் நன்று.
Since posts go missing often, editing will be done later. Cannot be helped. Thank you.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.