சொல்லமைப்பு:உதரம் உதிரம்
இங்கு குறித்த இரு சொற்களில் உதிரம் என்ற சொல்லை முதலில் எடுத்துக்கொள்வோம்.
உடலில் எப்பகுதியில் வெட்டு, கீறல் முதலியன ஏற்பட்டாலும் , இரத்தம் வருகிறது. அரத்தம் என்பதே சரியான சொல் என்பதும், அர் என்பது
சிவப்பு நிறம் குறிப்பது என்பதும், அர்+அத்து+அம் = அரத்தம், இதுபின் ரத்தம் என்று தலையிழந்து, பின் ரகரத்தில் சொல் தொடங்கக் கூடாது என்பதால்
இகரம் சேர்த்து இரத்தம் ஆனது என்பதும் நமக்கு முந்திய ஆய்வாளரால் நிறுவப்பட்ட ஒன்றாம்.
அரத்தம் சொட்டும், வடியும் அல்லது உதிரும் தன்மை உடையது. அதனால் அது உதிர்+அம் = உதிரம் எனப்பட்டதென்பது அறிதற்குரியது.
போரில் இ/அரத்தம் அல்லது உதிரம் சிந்தியோருக்கு மன்னர்களால் வழங்கப் பட்ட நிலம் உதிரப் பட்டி எனப்பட்டது காண்க.
அரத்தம் = குருதி எனவும் படும்.
உதரம் என்பது வயிறு. இதை அடுத்துக் காண்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.