Pages

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

நிவர்த்தி என்ற சொல்

நிவர்த்தி என்பது நம்  வழக்கில் உள்ளதாகும். என் மகளுக்குக் கல்யாணம்
செய்யத் தடைகள் ஏற்பட்டுக்கொண்டே உள்ளன, ஏதேனும் நிவர்த்தி செய்தல்  வேண்டும்  என்று பேசுவது நம் காதில் கேட்கிறது. நிவர்த்தி என்றால் என்ன,இச்சொல் எப்படி அமைந்தது?  ‍  என்பதைக் காண்போம்.

தொடர்கின்ற தடைகளை நிறுத்தவேண்டும்.  நில் > நிற்பு,  நிறுத்து என்பதற்கு  நி போட்டுக்கொள்ளுங்கள்.

மந்திரம் செய்வீர்களோ, ஏதேனும் மாயம் செய்வீர்களோ ‍:   இந்தத் தொல்லைக்கு ஒரு முடிவை வருவிக்க  வேண்டும்.  வரு . வருத்து, (வரச் செய்தல்).பிறவினை . இதன் தொடர்புடைய  சொல்  வரத்து என்றும்  வழங்கும்.  எ-டு :  போக்குவரத்து.   இனி  வருத்து > வருத்தகம் > வர்த்தகம்  பொருள் வருவித்து வணிகம் செய்தல் ;  பின்பு  பொதுப்பொருளில்  வழங்கியது ,

(வருத்தம் அல்லது துன்பம் வரச்செய்தல் அன்று ,  அது வேறு  ).

வரு > வருத்து > வர்த்து,   வர். (அடி)

இதை   (நிவர்த்தியை )  நிகழ்த்த ஒரு திறம் வேண்டுமே!  திறம் > தி.

ஆக, நி+ வர்(த்து) + தி.


நிவர்த்தி என்ற சொல் கிடைத்துவிட்டது.

இறுதி நிலை, வர்+தி என்றாலும் வர்த்து+ இ என்றாலும் வேறுபாடில்லை.  இருவழிகளும் ஒரு முடிபு கொள்கின்றன.

வர்+ தி என்பது வலித்து வர்த்தி ஆகும்

நிவர்த்தி :  நிறுத்தம் அல்லது நிற்றல் வருமாறு செய்யும் திறம்
 அல்லது நடவடிக்கை,

அறிந்து இன்புறுக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.