Pages

திங்கள், 12 செப்டம்பர், 2016

சங்கதத்தில் தமிழ்.

சமஸ்கிருத மொழியில்  மோனியர் வில்லியம்ஸ் ஆக்கிய அகரவரிசையில் 166,434 க்கு மேற்பட்ட சொற்கள் இருந்தன. .இவர் பிரிட்டீஷ் காலத்தில் இதை ஆக்கித் தந்தவர்.  பின்னாளில்  டாக்டர் லகோவரி  என்னும் பிரஞ்சு ஆய்வாளரும் அவர்தம்  ஆய்வுக் குழுவும் செய்த ஆராய்ச்சியின் படி . 1/3 பகுதி சமஸ்கிருதச் சொற்கள் திராவிடமொழிகளில். அதாவது பெரும்பாலும் தமிழிலிருந்து பெறப்பட்டு அமைக்கப்பட்டவை. அடுத்த 1/3 விழுக்காடு  மேலை ஆரியத்தோடு தொடர்புள்ளாவை. அவற்றின் மூலங்களைத் திராவிடமொழிகளில் தெளிவாகக் காண இயலவில்லை. ஈரான் முதல் மேல்நோக்கிச் செல்லச் செல்ல வழங்கும்  இந்தோ ஐரோப்பிய மொழிச் சொற்களோடு  தொடர்புகண்டவை. மீதமுள்ள 1/3 எங்கிருந்து வந்தவை என்று குழுவினரால் அறுதியிட்டு நிறுவ இயலவில்லை. மொழிநூல் சொன்னூல்  முதலிய கற்பாருக்கும் ஆய்வு செய்வார்க்கும் இவர்களின் ஆய்வுகள்  இன்றியமையதனவாகும்.

நாம் இதுவரை சில சொற்களைத் தாம் இங்கு ஆய்வு செய்துள்ளோம். அவை சொற்பமே. அதாவது கொஞ்ச நேரத்தில் சொல்லியோ படித்தோ முடிக்கக்கூடிய தொகையின. ஆகவே சொற்பம் ( சொல்+பு+ அம்)..

அற்பத் தொகையின என்றும் சொல்லலாம்.   அதாவது ஆங்கிலத்தில் negligible.  அல்+பு+அம் = அற்பம்.  தன்மையிலும் தொகையிலும் குறிப்பிடத் தக்கவை அல்லாதவை.

சமஸ்கிருதம் நன்கு செய்து திருத்தப்பட்ட மொழி.  பல ஆய்வாளார்கள் முயன்று முடித்துவைத்த மொழி.  அதன் பெயரே அதைத்  தெளிவிக்கும்.

சமஸ்கிருதச்  சொல்லமைப்பு  தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முன்னும் பின்னுமாய் நன்கு நடைபெற்றன. பல சொற்கள் அமைக்கப்பட்டன. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும்  இதனை விவரித்துள்ளார்.

கமில் சுவலாபெல் கணக்கிட்டபடி  ருக்கு வேதத்தில் 800 தமிழ்ச் சொற்கள் உள்ளன.  அவர் ஆய்வின்பின் வேறு சிலரும்  சில கண்டுள்ளனர்.

சங்கதத்தில் தமிழ்.

You may also like:

வாத்தியம்





சாய்த்தலும் ஆற்றலும் 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.