கள் என்ற அடிச்சொல்லின் ஒரு பொருண்மையை இவ்விடுகையில் (https://sivamaalaa.blogspot.sg/2016/08/blog-post_65.html )அறிந்து இன்புற்றோம்.கள் என்னும் அடிக்குப் பல பொருளுண்டு என்பதும் ஆங்குச் சொல்லப்பட்டது.
அதன் இன்னொரு பொருள் கருப்பு என்பது ஆகும்.
கள்ளர் என்ற தொழிலர் பெயரை ஆய்ந்த அறிஞர் பண்டித வேங்கடசாமி நாட்டார், கள்ளர் என்ற சொல் கறுப்பர் என்று பொருள்படுமென்று கூறினார்.
களங்கம் என்ற சொல்லும் கள் என்ற அடியினின்று பிறந்ததே .
இது கள்+ அங்கு+ அம் என்று பிரித்தற்கு வரும். இதற்கு அங்கே
உள்ள கருப்பு என்று வாக்கியப்பொருள் கூறலாம். அங்ஙனமின்றி, கள்+ அம்+ கு+ அம் என்று பகுத்து, கு என்னும் இடைச்சொல் இடையிட்ட இரண்டு அம் விகுதிகளைச் சொன்னாலும் அதனால் ஏற்படும் ஆய்வு இழுக்கு ஒன்றுமில்லை.. மொழிக்குப் பல சொற்கள் வேண்டுமாயின் இத்தகு தந்திரங்களைக் கைக்கொள்ளுதல் அறிவுடைமையே ஆகும்.
அது,இது, அங்கு, இங்கு என்பன தொடங்கிப் பல சொற்கள் தம் பொருளுடனோ பொருள் இழந்தோ சொல்லமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன..இடைநிலைகள் பொருளுடன்தான் பயன்படுத்தப் படவேண்டும் என்னும் ஒரு விதியோ ஏற்பாடோ மொழியில் இல்லை. பொருந்து மிடத்துப் பொருள் கூறினும் இழுக்காதென்பது அறிக. இதனால்தான் இன்று என்ற காலப்பெயரைக் கின்று என்று உருமாற்றி இடைநிலையாக்கினார் பவணந்தி முனிவர். (கு + இன்று )
களங்கம் என்ற சொல்லைப் புனைந்து இன்புற்ற ஆய்வாளர், அதில் அன் விகுதி சேர்த்துக் களங்கன் ஆக்கி நிலவுக்குப் பெயர் ஆக்கினர்.
களங்கம்> களங்கன்.
கள் + அங்கு+ அன் = களங்கன் எனினும் அதே.
"களங்க்" என்று நிறுத்தி உ+அம் என்பவற்றை விலக்கி, களங்கன் என்று ஆக்கி அதற்கு முடிவு சொன்னாலும் அதேதான். அடிச்சொல் "கள்" தான்.
களம் (கள் + அம்) என்றாலும் கருப்பு என்றே பொருள் தரும். கள் +அர்+ இ =களரி எனினும் கருமையே ஆகும். களர் எனினுமது. அர் என்ற பலர்பால் விகுதி இங்குப் பொருளிழந்தது.
இச்சொற்கள் இவ்வாறு வளர்ந்திருக்க, கள்ளர் என்ற கூட்டத்து அடையாளப் பெயருக்குக் கறுப்பர் என்ற பொருள்மட்டுமின்றித் திருடு செய்வோர் என்னும் பொருளும் உள்ளது. இந்தப் பொருள் எக்காலத்து இவர்களுக்கு வந்து சேர்ந்தது என்பதை அறிதல் இயலவில்லை.
இக்கூட்டத்து யாவரும் இத்தகு தொழிலில் ஈடுபாடு கொண்டனர் என்பது ஏற்கத் தயங்குமொரு கருத்தாகக் கருதப்படலாம். பண்டை அரசர் போர்க்குமுன் ஆனிரை கவரும் ஒரு படைப்பிரிவை வைத்திருந்தனர் ஆதலின் அதில் பணியாற்றியதன் மூலமாக இவ்வடையாளக் குறி ஏற்பட்டிருக்கக் கூடுமென்று கருதலாம். இருட்டில் செய்தற்குரிய வேலைக்கு ஏற்ற நிறமுடையராய் இருந்ததினால் இவர்கள் இதிற் சிறக்க
ஏற்புடையோர் என்று அரசன் கருதினன் என்க.
தற்கால ஆய்வுகளின்படி இவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து 70 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே வந்துவிட்டனர் என்பதை
குருதி ஆய்வின்மூலம் நிறுவியுள்ளனர்.. 1900 ஆண்டுகள் வரை கலப்பு மணங்கள் நிகழ்ந்துவந்துள்ளமையால், இவர்களும் கலந்து பின் கலவாமை போற்றும் புதுப் பழக்கம் மேற்கொண்டனர் எனலாம். பிற்காலத்து இவர்கள் ஆனிரை கவர் தொழில் மேற்கொண்டனர் என்பது ஏற்புடைத்தாகலாம். முன்னரே வழங்கிவந்த "கள்ளர்" (கறுப்பர் ) பெயருக்குப் பின் கொண்ட இத்தொழிலின் (அரசாணை ஆநிரை கவர்வுப் ) பெயர் ஒரு மெருகு தந்திருக்கலாம் . திருடுதற் கருத்து தவறாக ஏற்பட்டிருக்கலாம் .
Certain portions of this post could not be edited due to software error. Will attempt later.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.