தொல் என்ற சொல் மிகவும்
பழைய அடிச்சொல். இதன்
பொருள்கள் பல.
இதிலிருந்து விளைந்த
சில சொற்களைக் கவனிப்போம்..
தொல் > தொற்று
இது தொல்+து என்று
துவ்விகுதி பெற்று வினை
ஆயிற்று.
இது போன்று அமைந்த
இன்னொரு சொல்: பல்+
து = பற்று.
பிடித்தல் கருத்து
தொற்று என்பதன்
பொருளாவன:
ஏறுதல், ஒட்டுதல்.
தொடர்தல். கொடுத்தல்.
படர்தல், பற்றுதல்;
இனித் தொனி என்ற
சொல்லைப் பார்ப்போம்.
லகர ஒற்றில் முடிவது
னகர ஒற்றாகவும் முடியும்.
எடுத்துக்காட்டு:
திறல் > திறன்.
எனவே தொல் என்பது
தொன் என்றும் வரும்.
தொனி என்பது குரல்
ஒலியானது ஒலிக்குழாயான
தொண்டையிலிருந்து
பற்றிப்படர்ந்து
மேலேறுதலும் தொடர்தலும்
உடையது.
தொன் > தொனி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.