This is reposted as half of our post was not visible when we posted it earlier on. There is some bug
causing visibility problem. Hope this appears clear.
சகலகலாவல்லிமாலை
திருப்பனந்தாள் என்ற ஊரில் குமரகுருபர அடிகள் நிறுவிய சைவமடம் உள்ளது. இவர் பாடிய நூல் சகலகலாவல்லிமாலை என்னும் வணக்கப்பாடல்கள் கொண்டது. இந்நூல் தில்லி மாமன்னர் ஒளராங்ஜேப் அவர்களின் அவையில் அரங்கேற்றம் கண்ட பெருமையை உடையது.
இதனைப் பெருமைப் படுத்தும் வண்ணம் இம்மாமன்னர் காஞ்சியில் உள்ள குமரகுருபர சுவாமி மடத்திற்கு மடம் கட்டிக்கொள்ள இடமும் அதனைப் பிற்காலத்தில் நிறுவாகம் செய்யப் பல வேலி நிலங்களும் அளித்துள்ள
வரலாறு இந்நூலின் பழைய ஏடுகளில் காணப்படுவது குறிப்பிடத் தக்கது.
இதை அறிந்தின்புறு இவ்வேளை அம்மாலையினின்று ஒரு பாடலைச் சுவைத்தல் பொருத்தமாகுமன்றோ :
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும் பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.
உரை:
நாடும் : இறைப்பற்றில் பயன்பெறுவோரும் கவிவாணரும் சிந்திக்கின்ற,
பொருட்சுவை, சொற்சுவை தோய் தர : பொருளின் இனிமையும் சொல்லின் இனிமையும் நிறைவாகின்ற;
நாற்கவியும் : நான்குவகையான ( வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய ) பாடல்களும்;
பாடும் பணியில் : இயற்றுகின்ற செயலில்,
பணித்தருள்வாய் : எம்மை அமர்த்தி அருள் செய்க;
பங்கயாசனத்தில் கூடும் பசும் பொற்கொடியே : தாமரை மலராகிய இருக்கையில் அமர்ந்துள்ள வாடாத பொன்னின் வல்லியே;
கன தனக் குன்றும் : சுமையான செல்வமென்னும் குன்றினையும்;
ஐம்பால் காடும் : ஐந்து நிலங்களிலும் அமைந்துள்ள வனங்களையும்;
சுமக்கும் கரும்பே - தூக்கி வைத்திருக்கின்ற இனியவளே;
சகல கலா வல்லியே = எல்லாக் கலைகளையும் தருகின்ற கொடிபோன்றவளே.
என்றவாறு.
Further reading:
1, On Aurangzeb and his interest in Languages: read http://www.thehindu.com/opinion/interview/scholar-audrey-truschke-aurangzeb-is-a-severely-misunderstood-fig
‘Aurangzeb is a severely misunderstood figure’
2 . பொன்முடி திரையில் குமரகுருபரர்:
இப்படத்தில் கதையில் குமரகுருபரர் கதைமாந்தர் வாழிடத்திற்கு வருகை புரிவாதாகக் காட்சி வருகின்றது. அதில் அவர் டில்லி செல்வதாக அறிவிக்கிறார். அவருடைய நூலை அரங்கேற்றவும் மடம் கட்டுவதற்கு நிதி பெறவும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.