மனம் என்று ஒன்று எங்கே இருக்கிறது என்று கேட்கலாம். "ஹார்ட்" என்று ஒன்று உள்ளது. ஆனால் அங்கிருந்துதான் மனவுணர்வுகளெல்லாம் வருகின்றனவா ? ஆதாரம் எதுவுமில்லை. எல்லாம் மூளையிலிருந்து வருகின்றன என்கின்றனர் மருத்துவ அறிவியலார். "ஹார்ட்" என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்தும் தரும் ஒரு குழாயுறுப்பு. ஈர்த்தல் அடிப்படையில் எழுந்த ஈரல், ஈருள் என்பனவும் அதே அடிப்படை "ஈர்+து+ அ+ய்+ அம்" (ஈர்தயம் ? இருதயம்) என்பதும் இதைத் தெளிவிக்கும். அ= அது. ஈர் து = ஈர்ப்பது. அம் = விகுதி. யகரம் = உடம்படுமெய். ஈரலும் இருதயமும் அக்கை தங்கைச் சொற்கள். ஈ > இ குறுக்கம். சாவு+ அம் = சவம் என்பதும் குறுக்கமே. சா> ச.
ஒன்றை நோக்கி மனம் அசைவது ஆசை. அசை > ஆசை. முதனிலை திரிந்த தொ.பெயர்.
ஆசத்தி: அசை+ அத்து + இ = ஆசத்தி. ஆசை.
இனி ஆசு + அத்து + இ எனினுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.