சமாளித்தல்
என்ற சொல்லினைக் கூர்ந்து
கவனிப்போம்.
இதைச்
சமம் + ஆள் + இ
என்று பிரிக்கவேண்டும்.
சமாளித்தல்
என்றால் என்ன என்று கேட்டால்,
பதில் கூறுவது கடினமாகத்
தோன்றுகிறது. ஆனால்
அச் சொல்லை மூலங்களாகப்
பிரித்துவிட்டால் எளிதில்
பொருளைக் கூறிவிடலாம்.
வழக்குப் பொருளைக்
கூறுவது எளிதாக இல்லாவிட்டாலும்
சொல்லமைப்புப் பொருளை எளிதாகக்
கூறிடுதல் இயலும்,
அது:
சம ஆளாக நிற்றல் என்று
பொருள்படும்.
சொல்லிறுதியில்
வரும் இகரம் அதை வினைச்சொல்லாக்குகிறது.
இது பழங்காலம் தொட்டே
தமிழ் மொழியில் பயன்படுத்தப்
பட்டுப் பெயர்ச் சொற்களை
வினைகளாக்குவதற்குப் புழங்கப்
பட்டுள்ளமை காணலாம்.
-------------------------------------
எடுத்துக்காட்டுகள்
சில காண்போம்:
வழு >
வழி > வழிதல்,
வழித்தல்.
கொழு ?
கொழி > கொழித்தல்.
நெள் >
நெளி > நெளிதல்,
நெளித்தல்.
படு >
படி > படிதல்
: மனிதன் பாயில்
படுப்பதுபோலவே தூசு போய்
ஓரிடத்தல்
படுத்துக்கொள்கிறது. ஆகவே
தூசு படிகிறது என்கிறோம்.
படு >
படி > படித்தல்.
கண்ணின் ஒளி அல்லது
ஒளிபெறு தன்மையானது ஏட்டுடன்
இனைப்பை ஏற்படுத்திக்கொண்டு
பார்வையைப் படியச் செய்கிறது.
இதை விளக்கத் தெரியாத
அகரவரிசைக் காரனொருவன் படி
என்பது தமிழன்று என்று
எழுதினான். ஆராய்ச்சியின்மையே
இதற்குக் காரணம்.
அக்கு
சிந்தா பாடா மூ என்ற மலாய்
வாக்கியத்தில், பாடா
என்பதென்ன? படிதலேயாம்.
என் காதல் உன்மேல்
படிகிறது, படுகிறது
என்று தெளிவிக்கலாம். படு>
படி, படு >
பாடு என்பது
எத்துணை
அழகிய தமிழ்.
தமிழிலும்
படு என்பது துணைவினையாகப்
பயன்படுவதாகும். செய்யப்படுதல்
, சுடப்பட்டார்,
கூறப்பட்டது என்பன
காண்க.
இப்போது
சமாளித்தலுக்குத் திரும்புவோம்.
இறுதி இகரமே வினைச்சொல்
ஆக்கியது. இவ்விகரமும்
தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு
கண்டதே ஆகும். இதுவே
சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.
இன்னொரு
சொல் ஓக்காளித்தல். ஓக்காளம்
என்பது வினையாகும்
போது
ஓக்காளித்தல் ஆகும். இகரம்
வந்து வினைச்சொல் ஆனது.
சமம்
என்றால் ஒன்றுக்கு மற்றொன்று
இணையாக அல்லது ஒப்பாக
அமைந்தது
என்பது. அமை>
சமை > சம
> சமம் சமன்.
அல்லது
அமை >
அம > சம>
சமம்.
தமிழிலும்
படு என்பது துணைவினையாகப்
பயன்படுவதாகும். செய்யப்படுதல்
, சுடப்பட்டார்,
கூறப்பட்டது என்பன
காண்க.
இப்போது
சமாளித்தலுக்குத் திரும்புவோம்.
இறுதி இகரமே வினைச்சொல்
ஆக்கியது. இவ்விகரமும்
தமிழில் தொன்றுதொட்டு
பயன்பாடு
கண்டதே ஆகும். இதுவே
சமாளித்தலிலும் பயன்பட்டுள்ளது.
இன்னொரு
சொல் ஓக்காளித்தல். ஓக்காளம்
என்பது வினையாகும்
போது
ஓக்காளித்தல் ஆகும். இகரம்
வந்து வினைச்சொல் ஆனது.
சமம்
என்றால் ஒன்றுக்கு மற்றொன்று
இணையாக அல்லது ஒப்பாக
அமைந்தது
என்பது. ஒத்தமைவு!
அமை> சமை
> சம > சமம்
சமன். அல்லது அமை
> அம > சம>
சமம். இதற்கு
அது அமையும். இதற்கு
அது சமையும். இதற்கு
அது சமம்.
அகரத்தில்
தொடங்கும் சொல் சகரமாதல்
பெருவரவு. முன்
எடுத்துக்காட்டுகளைப்
படித்தறிக. Pl see previous posts. அமை
என்பதில் உள்ள இறுதி ஐ அகரமாவது
ஐகாரக் குறுக்கம். உதை
என்பது ஒத என்று பேச்சில்
வரும். ஐகாரம்
அகரமாவது ஏனைத் திராவிட
மொழிகளிலும் ஏராளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.