மேற்கண்ட இடுகையிலிருந்து :
பாடலைத்
தொடர்ந்து சுவைப்போம்:
புரிமட
மரை ஆன் கரு நரை நல் ஏறு
தீம்புளி
நெல்லி மாந்தி அயலது
தேம்பாய்
மாமலர் நடுங்க வெய்துயிர்த்து
ஓங்குமலைப்
பைஞ்சுனை பருகு நாடன்
நம்மை
விட்டு அமையுமோ மற்றே கைம்மிக
வடபுல
வாடைக் கழி மழை
தென்புலம்
படரும் தண்பனி நாளே
தீம்புளி
நெல்லி மாந்தி என்பது:
நெல்லிக்கனியானது
இனிப்பும் புளிப்பும் கலந்த
சுவை உடையது.
எனவே
தீம்புளி என்கிறார்
தீம்
- இனிப்புடைய;
புளி -
புளிப்புடைய.
நெல்லி
= நெல்லிக்கனி.
மாந்தி
- தின்று.
அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க
வெய்துயிர்த்து :
: என்பது:
அருகிலிருந்த
செடிகளில் பூத்திருந்த தேன்
சுமந்த பெரிய மலர்கள்
அசைவுறும்படியாக கடுமையான
மூச்சு விட்டுக்கொண்டு;
தேம்
பாய் :
இது தேன்
உள்ளிருந்து வெளியில் வந்து
விழும்படியான நிலையில் அந்த
மலர்கள் அவ்வளவு தேனைச்
சுமந்து நின்றன என்பதாம்
பாய்தல்
என்ற சொல்:
தேம்பாய
உண்டு தெவிட்டு மனம் என்று
கம்பனும் தேன்வந்து பாயுது
காதினிலே என்று பாரதியும்
பாடியிருத்தலும் நினைவுகூர்க.
ஓங்குமலைப்
பைஞ்சுனை பருகு நாடன்:
இது
முன்னர் விளக்கப்பட்டது.
வடபுல வாடைக் கழிமழை: வடக்கிலிருந்து காற்று வீசி அடர்ந்த மேகங்களைத் கொண்டுவருகின்றது. இந்த வடக்குக் காற்றினை வாடை என்பர். மழை என்றது மேகங்களை.
வடபுல வாடைக் கழிமழை: வடக்கிலிருந்து காற்று வீசி அடர்ந்த மேகங்களைத் கொண்டுவருகின்றது. இந்த வடக்குக் காற்றினை வாடை என்பர். மழை என்றது மேகங்களை.
தென்புலம்
படரும் தண்பனி நாளே :
இந்தக்
காலத்தில் குளிர்பனி தெற்கு
நோக்கி எங்கும் பரவித்
துன்புறுத்துகின்றது.
இத்தகு
சூழலில் புலவர் கூறும்
செய்திதான் யாது?
அடுத்துக்
காண்போம்
edit and share features too slow. will edit later.
குறுந் : வடபுலக் காற்று தென்புலப் பனி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.