Pages

ஞாயிறு, 22 மே, 2016

சிந்தும் சில்க்கும் Sind and Silk

சிந்தும் சில்க்கும்

சிந்து என்பது தமிழ்ச்சொல். சிந்து என்பது  தமிழ் யாப்பிலக்கனத்தில் வரும் பாவடிக்கான  ஓர் அளவீடு ஆகும். ஓர் அடியில் மூன்று  சீர்கள் இருந்தால் அது சிந்து.  " செந்தமிழ்/ நாடென்னும்/ போதினிலே" என்று வரும் பாட்டில் மூன்று சீர்கள்  உள்ளன.  ஆகவே அது சிந்து
காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து என்ற தொடக்கத்தில் சிந்துகள் பல.
நான்கு சீர்கள் இருந்தால் அதுவே ஓர் அடிக்கு அளவு ஆகும். அது அளவடி எனப்படுவது.

சிந்து என்னும் சொல்  சில்+ து  என்ற ஒரு பகுதியையும் ஒரு விகுதியையும் கொண்டது, சில் என்பதற்குச் சிறு என்றும் பொருள்.
அளவடியுடன் ஒப்பிடும்போது சிந்தடி சிறியது. அதனால் அது
சிந்தடி எனப்பட்டது. இந்தியாவில் உள்ள பல மொழிகட்கு இலக்கியமே இல்லாதிருந்த காலத்தில் தமிழில் பாட்டுகள் இருந்தன.
மேலும் தமிழில் கிடைத்த பல நூல்கள் எல்லாம் பாட்டாகவே இருந்தன. இருக்கின்றன   பேச்சு ஏற்பட்டு, எழுத்து ஏற்பட்டு, சொற்கள் ஏற்பட்டு, வாக்கியங்கள் அமைந்து.இலக்கணங்கள் அமைவதற்கு மொழியானது
பல நிலைகளைக் கடக்கவேண்டும், ஆகவே  தமிழ் தொன்மையானது என்பதை அறியலாம்.  அறியவே சிந்து என்ற இலக்கணக் குறியீடும் மிக்கப் பழமையானது ஆகும்.

சில் து என்பது சொல்லாகும் போது சில் என்பது சின் என்று மாறிப்
பின் விகுதி ஏற்கும்.  சின் ‍  =  சின்னது.   சின்+ து =  சிந்து,   முன் தி  என்பது முந்தி என்று ஆனதையும் பின் + தி என்பது பிந்தி என்றும் வந்ததையும் ஒப்பிட்டு அறிவுபெறலாம். மன் திறம் மந்திரம்
என்றும் தன் திறம் தந்திரம் என்றும்  காணலாம். ஒழுங்காக ஆராயமலே சிலர் அகரவரிசைகள் முதலியன புனைந்துள்ள படியால்
அவர்கள் இதை அறிந்தாரில்லை.

சிந்து என்பது ஒரு துணியின் பெயராகவும் இருந்தது என்பதை
வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளனர். இந்தத் துணி, பாக்கிஸ்தானிலுள்ள மொகஞ்சதரோ ஹரப்பா பகுதிகளில் நெய்யப்பட்டது, இதை கா. அப்பாத்துரையாரின் தென்னாடு என்ற‌
நூலில் அவர் பதிவு செய்துள்ளார். இதை ஆராய்ந்து சொன்னவர்
அறிஞர் பி.டி  சீனிவாச ஐயங்கார்.  அதனால் அந்தப்  பகுதியில்
ஓடிய ஆற்றுக்குச்  சிந்து என்றும் அந்த நிலப்பகுதிக்குச் சிந்து என்றும்
மொழிக்குச் சிந்து என்ற பெயரும் ஏற்பட்டன.  சிந்து மொழி தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையது என்று இப்போது கூறியுள்ளனர்.  அதுபற்றிய ஓர் இடுகையை யாம் இங்கு ஒரு மூன்று ஆண்டுகளின் முன் போட்டிருந்ததாக நினைவு. இப்போதுதேடிப்பார்க்க  நேரம் கிடைக்கவில்லை. இது இனி நடைபெறும்,

சில் என்பது சிந்து என்று உருவாகியது.  சில் என்பது சில்க்
என்றும் ஆனது.  ஆகவே அடிச்சொல் ஒன்றுதான்.  சில் து,  சில் கு.  துவும்  குவும் தமிழில் இன்னும் விகுதிகளாகவே உள்ளன.

சிந்து வழிதான் சில்க் ரூட்.

கொடுத்த குறிப்புகளைத்  தேடிப் பிடித்து நீங்களும் ஆய்வு செய்யலாம்.

அங்கெல்லாம் தமிழ்ச்சொற்கள் வழங்கியது உண்மை.  மிகச் சிறிய நூலால் ஆன துணி  சிந்து,  சில்க்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.