Pages

ஞாயிறு, 8 மே, 2016

பஜி >பஜன் also source of word Gaja

பஜி என்னும் சொல்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=======================

பஜி என்பது கேட்பதற்கு இனிய சொல். ஆனால் தமிழன்று. முருகனைப் பஜி, கண்ணனைப் பஜி, முக்கண்ணன் மகனைப் பஜி என்று வருங்கால் இன்னோசை பிறக்கிறது. பண்டைத் தமிழருக்கு இந்த ஒலியும் இவை போல்வன பிறவும் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. ஒலியில் என்ன இருக்கிறது?  ஓரெழுத்தை ஒலித்து, அதைக் கேட்பவர் அதன் பொருளைப் புரிந்துகொண்டு அதற்கான  வேலை நடைபெற்றுவிடுமானால்  அவ்வளவு தானே வேண்டியதெல்லாம். உயர்வான ஒலி, தாழ்வான ஒலி என்று எவையுமில்லை.

இருந்தாலும் தொன்மைக்குக்  காப்பு (காத்தல், பாதுகாப்பு ) அளிக்க விரும்பி, தொல்காப்பியனார் இயற்றிய இலக்கணத்தில் சில ஒலிகளை விலக்கிவிடவேண்டுமென்றார். இதையே நாம் இது நாள் வரை பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்.

எந்த எந்தத்  தமிழ் ஒலிகட்கு வேற்றொலிகளைப் போடலாம் என்ற ஒரு முறை இருந்திருக்கிறது. இதன்படி ஒலிகள் மாற்றியமைக்கப் படுவதை பலவிடங்களில் நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம்,

இதன்படி, " ட"  வுக்கு " ஜ"  என்ற எழுத்தை இடலாம் என்று தெரிகிறது.
யானை என்ற விலங்குக்கு ஒரு சொல் அமைக்க விரும்பியவர்கள்
கடை என்ற சொல்லை எடுத்துக்கொண்டனர். யானையின்  முகம் கடைந்ததுபோன்றிருக்கிறது  என்பதனால் கடை என்ற சொல்லினின்றும் ஒரு பெயரை அமைக்க விரும்பினர்.

எனவே,  கடை > கட > கஜ.

கடைந்தது போலும் முகமுடைய விலங்கு என்று பொருள்.

யானைக்கு ஆரியர்களிடம் பெயரில்லை என்றும் அவர்கள் முன்னாளில் வாழ்ந்த இடங்களில் இந்த விலங்கு இல்லை என்றும்
ஜான் கே( John  Kay ) என்ற வரலாற்றாசிரியர் தெரிவிக்கிறார்.   இது ஒருபுற மிருக்க :

 கடை > கட > கஜ(ம்)   என்பது உண்மை என்று தெரிகிறது.

இதுபோல படி  என்பதிலிருந்து பஜி அமைந்தது.

சில வேளைகளில் பாட்டுப் படித்தல் என்பதுமுண்டு. ஆகவே படித்தலுக்கும்  பாடுதலுக்கும் பெரியதொரு  வேறுபாடு முன்னாளில் இல்லை என்று தெரிகிறது.  "உன்னை நினைச்சேன், பாட்டுப் படிசசேன்" என்றொரு திரைப்பாடலும்  நாம் கேட்டிருக்கிறோம்.  முன்னாளில் பெரிதும் பாடல்களே இருந்தன. உரை நடை என்பது பின்னாள் வளர்ச்சி.

படி > பஜி    இத் திரிபு இப்போது  தெளிவு அடைந்துள்ளது ..

பஜி >பஜன்.

இனி

ஆடு  > ஆட  >  ஆஜ  ( ஆட்டின் தொடர்புடைய )

மேடு  >   மேடை >  மேஜை
மேடை >  மேசை

ஆகவே  இவ் ஆய்வு மெய்ப்பிக்கப் பட்டதென்க .

அறிந்து இன்புறுக.

Auto-correct errors have been   edited..Apologies.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.