சரித்திரம்
என்ற சொல்லைப் பற்றித்
தெரிந்துகொள்வோம்.
இதற்குத்
தமிழில் " வரலாறு
" என்று
சொல்கிறோம். வரலாறு
என்பதை "நடை
பெற்றதைச் சொல்வது "
என்று சொல்லலாம்.
சரித்திரம்
என்பதும் அதையே குறிக்கிறது
என்றாலும் அச்சொல்லில்
மற்றொரு பொருளும் உள்ளது..
அது யாது?
சரித்திரம் - சொற்பொருள் :
நடைபெற்றதைச்
சரியாகவும் திறம்படவும்
உரைக்கும் கலையே சரித்திரம்.
சரி +
திறம் =
சரித்திறம்
> சரித்திரம்
ஆனது. திறம்
- திரம்
என்ற முன்னொட்டாய் ஆனதைப்
பல இடுக்கைகளில் முன்
குறித்துள்ளேன்.
ஆனாலும் சில எடுத்துக்காட்டுகள்:
ஆ
என்று வெகுண்டு எழுந்து
திறமாக ஒன்றை எதிர்கொள்வது
ஆத்திரம். இது
வெகுண்டோன் நடக்கும் விதத்தைக்
கவனித்தமைந்த வழக்குச் சொல்
ஆகும். இங்கு
திறம் என்பது
திரமானது - அதாவது ஒரு பின்னொட்டு ஆனது.
வேண்டுதல்கள்
பலித்து நிலைபெற ஓதப்படுவது
மந்திரம் 2 . மன்னும்
( நிலைபெறும்)
திறத்தை
வழங்கும் வலிமை உடையது என்னும் நம்பிக்கைப் பொருளது.
மன்(னு)
+ திறம் =
மன் திறம் >
மந்திரம்.
ஆனது இது
முன்னும் ( thinking,
meditating) திறம்; பின் மன்+திறம்
> மந்திரம்.
ஆயது எனறு
பொருள் கூறினும் ஒக்கும்.
எப்படியாயினும்
தமிழே. 1
இதிகாசம்
என்ற சொல்லை அடுத்து அறிவோம்.
குறி ப்புகள்
ஐந்திறம் என்பதே ஐந்திரம் ஆகிவிட்டது . இது இந்திரன் எழுதிய இலக்கணத்தைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. உண்மையில் எழுத்து. சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐந்தியலே ஐந்திரம். தமிழிற் சொற்கள் சில றகர ரகர வேறுபாடு இன்றி வழங்கும்.
அறிஞர் கா சு பிள்ளையும் இங்ஙனமே கருதினார் .
2 தொல்காப்பியம் கூறும்பொருள் இதுவன்று.
மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491)
2 தொல்காப்பியம் கூறும்பொருள் இதுவன்று.
மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.