Pages

புதன், 18 மே, 2016

சி.போ,10 அவன், தான், தத்வமசி

அவனே தானே  ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க‌
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

‍=======  சிவஞான போதம் பாடல் 10

இதன் பொருளாவது:

அவனே ‍‍-  சிவமே;   தானே ‍-  ஆன்மாவாய்;  
ஆகிய ‍ - ஒன்றுபட்டிருக்கும் , 
அந்நெறி ஏகன் ஆகி  -  அந்தப் போக்கிலே 
இரண்டற்ற நிலை அடைந்து; 
இறைபணி நிற்க ‍-  இறைவனின் செயலாய் 
மாறாமை அடைய; 
மல மாயை தன்னொடு - மலம், மாயை
ஆகியவற்றுடன் கூடிய; 
வல்வினை இன்றே  -  கர்மவினையும் ஆகிய
மூன்றும்  இல்லையாய் ஒழியும்.




சிவமும் ஆன்மாவும் ஒன்றுபடுதற்கு,  இரண்டு மாறுபாடுகள் நீங்குதல் வேண்டும்; 
ஒன்று யானே இயற்றுவோன் என்னும் எண்ணம்;  இன்னொன்று யானே 
எல்லாப் பயன்களையும் அடைவோன் என்னும் எண்ணம்,  இவை இரண்டும்
மாறுகோள் ஆதலின் நீங்கினாலே சிவம் தான் ஆகும்.  எல்லாவற்றையும் 
இயற்றுபவன் அவனே.   எல்லாவற்றின் பயனும் அவனுக்கே ஆம்.
ஊனக்கண்ணால் சிவம் (இறை ) தான் (ஆன்மா)  ஆன இரண்டும் வேறு வேறு 
என்றுதான் காண முடிகிறது. ஞானக் கண்ணால் மட்டுமே  இவை இரண்டும்
வேறுபாடோ பாகுபாடோ அற்ற ஒன்றேதான் என்பதைக் கண்டறிய இயலும். 
இதை " அவனே தானே ஆகிய  அந்நெறி ஏகனாகி"  என்னும் தொடர் விளக்குகிறது. 

"தத்துவமசி"  என்னும் பெருமொழி இதனையே நன்கு எடுத்தொளிரச் 
செய்வது ஆகும்.  

இதைத் தமிழால் பொருள்கூறின்,  தன் + து+  அம் +  அசி > தத் + து+ அம் + அசி > 
தத்துவமசி ஆகும்.  தன் என்பது த என்று கடைக்குறைந்து,  து என்ற 
விகுதியுடன் புணர்ந்தது பின் தத்து ஆனது. .  அழி என்பது அசி என்று திரியும்.
அதாவது தான் என்பதை அழித்தல் ஆகும்,  தான் அழிய, அவன் வேறு 
தான் வேறு  அல்ல எனற்பாலது பெறப்படும்.

இது சந்தோக்கிய உபநிடதத்திலும் கூறப்படுவதாகும்.
 Chandogya Upanishad 6.8.7  சமதகிருதத்தில் இது பல்வேறு 
வகைகளில் விளக்கப்படுவது ஆகும்.





will edit   There is some software error in this post which cannot be cleared at the moment.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.