கடலென்பது மிக விரிந்த நீர்ப்பரப்பாதலின், அதனை அப்படியே உண்டுவிடவோ குடித்துவிடவோ முடியாது. கடல் குடித்தார் என்று தமிழிற் சொன்னால், கடல் நீரைக் குடித்தார் என்றுதான் பொருள்.அது உப்பு நீரானதால் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்றதன்று எனப் பெரும்பாலும் ஒதுக்கப்படுவது ஆகும். கடல் குடி நீரன்று, குடித்தார் எனப்படுவதாலே
கடலை முழுமையாகக் குடித்து மாயவித்தை காட்டியவர் என்று சிலர் சிந்தித்து, ஒரு கதையைக் கட்டிவிட்டனர். யாரிடமும் சென்று நீர் என்று இரந்து பெறாமல், கிட்டாப் போதில் கடல் நீரையே அருந்தி வாழ்ந்தார் என்று சொல்வதே ஓரளவு பொருத்தமானது. இப்படிப் பொருள் கொண்டால் கடல் என்பது ஆகுபெயராய்க் கடல் நீரைக் குறிக்கும். கடல் வேறு; அங்குக் கிடைக்கும் நீர் வேறு. அதாவது கடலைக் குடிப்பது வேறு; கடல் நீரைக் குடிப்பது வேறு. கவிதைகளில் ஒழுங்காய்ப் படிக்காவிட்டால், பொருள் மயக்கம் உண்டாகும்..
மேலும் இவருக்கு அகத்திய என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கலாம். அகத்தி என்பது மருத்துவக் குணங்கள் பல
அடங்கிய ஒருகீரை வகை ஆகும். அகத்திக் கீரை உண்டதாலோ,
அகத்திமரத்தை விரும்பியதாலோ, அகத்தியை மருந்தாகப் பயன்படுத்தியதாலோ இப் பெயர் இவருக்கு ஏற்பட்டிருக்கலாம்,
பெரிதும் வீட்டிலேயே அல்லது குகைகளிலேயே தங்கித் தவமேற்கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆத்துக்காரன்,
(அகத்துக்காரன்), ஆத்துக்காரி ( அகத்துக்காரி ), ஓரகத்தி (ஓர்
அகத்தி ) என்ற சொற்களையும் ஆய்தல் வேண்டும். அகத்தி என்றால் வீட்டுக்குள் இருப்போள், இருப்போன் என்று பொருள்.
இதை யாரும் ஆய்ந்ததாகத் தெரியவில்ல.
இன்னும், குடித்து என்றால் குடியை உடைத்து அதாவது குடியை உடைய என்றும் பொருள் ஆகும். குடி என்ற சொல் இன்று பெயர்ச்சொல்லாகவும் வழங்குகிறது. வினையாகவும் வழங்குகிறது. " கடல் குடித்த " கடல்பக்கம் வீட்மைந்த என்பது கடல் நீரைக் குடித்துக்கொண்டு திரிந்தவர் என்பதினும் நல்ல பொருள் விளக்கமாகவே படுகிறது.
கடலை எடுத்து உண்டவர் என்று தவறாகப் பொருள் கொண்டு, சிலர்
அகத்தியர் என்று ஒருவரே இருந்ததில்லை என்று மறுக்கும் அளவிற்கு அறிஞர் சிலரை எழுதவைத்துவிட்டது இந்த அகத்தியர்
பற்றிய தவறான பொருள்கோடல்கள் என்பது தெளிவு.
கடல் குடித்த அகத்திய மா முனி : கடல்பக்கமாக குடியுடையவராய் அகத்துள் தவமியற்றியவர் என்பது நன்றாகும். கடல் - கடல்பக்கம் ; குடித்த - குடியுடை கூட்டத்தின் . ; அகத்தியர் - வீட்டினர். அகத்தியருக்குத் தமிழ் போதிக்கப்பட்டதாகக் கதை இருப்பதால், அவர் மனிதரே . ஆகையால் அவர் கடலைக் குடிக்க முடியாது.
இது பற்றிப் பின் சிந்திப்போம்.
will edit.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.