தமிழுரை நாவினார் சொற்களில் இடையிலோர் ளகர ஒற்று இருப்பதைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. எனினும் "கேள்வி " என்பதிற் போல் சொற்களில் வருமேனும் ஆங்கு ஒருவாறு "கேளிவி :" என்றோ "கேளுவி " என்றோ எளிதாக்கிக் கொள்வர். கேள்ப்பார் என்றும் சொல்லாமல் கேட்பார் என்றும் சொல்லாமல் "கேப்பார்" என்று மாற்றி நாவுக்கு நல்லது மேற்கொள்வர். . கேப்பார் என்பதில் வினைப்பகுதி யாது? கே என்பது மட்டுமோ??
தேடித் திரட்டிக் கொள்வதே திரவியம். கடலிற் திரளும் முத்து போன்றவையும் திரவியமே.
திரள் > திரள்வு > திரள்வி .> திரள்வித்தல். (திரட்டுதல்).
திரள்வி + அம் = திரள்வியம்.> திரவியம் .( ள் கெட்டது , அதாவது மறைந்தது )
வேறு வழிகளிலும் விளக்கலாம். திர் > திர > திரள் ; திர் > திர > திரவியம்
எனினுமதே.
நீர்த்துளிகள் ஒன்றாகி வருவது திரை. திரைகடல் எனக்காண்க.
இறுதியில் ள் வரும் சொற்களில் அது மறைவதைக் கண்டிருக்கிறீர்களா?
அவ் ஆள் > அவ்வாள் > அவா ( ஆவல் குறிக்கும் அவா வேறு ).
அவா பெரியவா; அவா சொன்னா சரிதான்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.