பிள்ளைக்கு மென்குட்டிப் பூனையுடன் ஓடியாடி
துள்ளிக் குதித்திடத் தூண்டிடும் வெள்ளையுளம் ;
சொல்லிக் கொடுப்பவர்க் குள்ளிலோர் நல்லாசை
அள்ளிப் படிப்பதில் ஆகிடணும் மேலெனவே.
கவர்ச்சிப் பொருள்களுடன் கல்விக்கோ போட்டி!
தவற்றை அறியாத் தடுமாற்ற மென்றே
உவர்ப்பாய் வரும்பேச்சு "ஒழுங்காய்ப் படித்தே
உயர்ந்திடப் புத்தியுனக் கில்லை!"யென வைதிட்டார்.
பாவம் சிறுபிள்ளை என்று கருதி அவன்
நோவ ஒறுத்திடா நுட்பநெறி ஆரறிவார்
கோலை எடுத்தால் குரங்குமே ஆடிவிடும்
வாலை நறுக்கென்று வாதமும் வந்திடுமே!!
will edit.. A spy programme attached to our browsers by third party to read and edit have been removed successfully.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.