மகள் என்பது குறிக்கும் புத்திரி, மற்றும் ஆண்பால் புத்திரன், பலர்பால் புத்திரர் முதலியன தமிழில் வழங்கும், இவற்றைத் தமிழாக ஏற்றுக்கொள்ளவில்லை தமிழ்ப்புலவர்.
இவற்றின் அடிச்சொல்லைக் கண்டு பிடிப்போம்.
புதல்வன் என்பதன் அடியை முன் இடுகையில் ஒரு பத்தியில் குறித்துள்ளோம்.
http://sivamaalaa.blogspot.sg/2015/12/blog-post_63.html
இதுவும் அதே புது என்னும் அடியினின்று வருவதே.
புத்திரி புதியவளாக வந்து இருப்பவள். அதாவது குடும்பத்தில் பிறந்து புதிய உறுப்பினளாய் இவ்வுலகில் வந்தவள்-. தாய் தந்தையர் முன்னரே தோன்றிப் பழமை எய்திவிட்டவர்கள். முதலில் பிறந்த குழந்தையைக் குறித்துப் பின் வளர்ச்சி பெற்றுப் பெரியவர்கள் ஆனோரையும் குறித்தது இச்சொல்.
புது + இரு + இ = புத்திரி. ( தகரம் இரட்டித்தது. )
புது + இரு + அன் = புத்திரன் .
புது + இரு+ அர் = புத்திரர்.
இரு என்ற சொல்லை இடையில் செருகி அமைந்த இன்னொரு சொல்:
நம் + புது+ இரி = நம்பூதிரி.
இதில் பூதிரி என வந்தது முதலெழுத்து நீண்டதனால்.
முதனிலை திரிதல் தொழிற்பெயரிலும் பிற பெயரிலும் வரும்,,
புத்திரி என்ற சொல் மலாய் மொழியிலும் உள்ளது. அங்கு அதற்கு "இளவரசி " என்று பொருள். பல மொழிகளிலும் புகுந்துள்ள இந்தப் புத்திரச் சொல்லை அமைத்து வழங்கிய பெருமை தமிழினது ஆகும் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.