Pages

வியாழன், 5 நவம்பர், 2015

வாசித்தல் படித்தல்

 இவ்விரண்டு சொற்களும்  ஏறத்தாழ  ஒரே பொருளுடையவை .

வாசித்தல் என்ற சொல்லைப் பார்ப்போம்.

இச்சொல்  வாயி என்றே மலையாள மொழியில் வருகிறது.  அதாவது எழுத்தில் இருப்பதை வாயினால்  வெளிப்படுத்துதல் என்று பொருள்.

வாய் >  வாயி  >  வாயித்தல் >  வாசித்தல்.

யகரம்  சகரமாக மாறும் என்பதை   முன்னரே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எ-டு:  வாயில்  >  வாசல்.
            நேயம்  >  நேசம்    
             தோயை > தோசை .  ( நீரில் தோய்த்து  அரைத்துச் செய்த  சிற்றுணவு,)                   தோயல். 
             தேஎம்>  தேயம் >  தேசம். ( தேஎம்  என்பது  பழந்தமிழ் )                 
            ஒயனை  >  ஒசனை  
( ஓய்தல் >(ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் )  >  ஒயனை  >  ஆல் + ஓசனை =  ஆலோசனை : ஆலமரத்தடியில்  சிந்தித்தல் . இதில்  அகல்>  ஆல்  ஆகி  அகலச் சிந்தித்தல் எனினும் ஆகும். )

            ஒயனை >  ஓசனை    இதுபின் யோசனை ஆயிற்று.
             ஆனை  >  யானை;     ஆண்டு >  யாண்டு.   இவை  கண்டு  இத்திரிபு                  உணர்ந்து கொள்க.
             காயல் > ( காசல்) >  காசம் .   இருமல், காய்ச்சல்  முதல் பல அறிகுறிகள் காட்டும்  என்புருக்கி  நோய்.  காச நோய். காயல் + நோய் =  காயனோய் > காச நோய் <  காசம் + நோய்  என்ற பிறழ் பிரிப்பு ,  காசம் என்ற சொல்லை  ஈன்றது .   

படித்தல் என்பது  நூலில் உள்ளபடியே  கற்று அல்லது வாசித்து அறிதல்.  படியே உணர்தல் அறிதல் அல்லது ஓசை செய்தல்  படித்தல் என்க,

படி + அம்  =  பாடம் ;  முதனிலை நீண்டு  அம்  விகுதி பெற்ற தொழிற்பெயர். இதில் படி என்பதிலுள்ள இகரம் குன்றியது ,  நடி + அகம் =  நாடகம்  என்பதிலும் 
இகரம் குன்றி முதனிலை நீண்டு விகுதி பெற்றது.   இப்படிப்  பல உள,


----------------------------------------------------------------------------------------

ஆம் >  ஓம் ,  அம்மை > உம்மை;  அம்மா> உம்மா > உமா  முதலிய திரிபுகளை 
மறத்தலாகாது.  ஆமை  >  ஏமை > ஓமை ;   ஓம்  அடிச்சொல் : ஓமை;  ஓம்பு. 
ஏமை also connected to  ஏமம்.   ஓமம்  a medicinal seed that protects you.  Notice the central concept of protection. Will explain when opportunity arises.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.