அறிவியற் பேரறிஞர் அப்துல் கலாம் இந்தியா ஷில்லோங்க்கில் காலமானார் . ஆழ்ந்த இரங்கல்.
அறிவியற் சாதனை அன்புகெழு உள்ளம்
புரிவியலால் வென்றோன் புவியை ----- கருவில்
திருவமைந்த தீந்தமிழன் தேன்போல் தெளிந்த
பொருவிலாப் பேச்சினனைப் போற்று.
புரிவியல் - practice as opposed to theory,
பொருவிலா - ஒப்பிலா
இராமே சுவரம் இராமபற் றாரோ
டுறாமக் களையும் ஒருபரிசால் உய்க்க ,
கலாமைக் கொடுத்த கலைசேர் புரட்சி
நிலாவானும் தந்ததற் கொப்பு .
இராம பற்றாரோடு : இராம பக்தரோடு.
இராமப் பக்தர் என்று எழுதார் ஆதலின் இராமப் பற்றார் என்று அமைக்கவில்லை . வழக்கு நோக்கியது
உறா மக்களையும் : இராமரைப் பின்பற்றா மக்களையும் .
உய்க்க : முன் செலுத்த
கொடுத்த : ஆண்டவன் அல்லது இராமேசுவரம் தந்த
நிலா வானும் : வானம் நிலாவினை
வானம் நிலவைப் பரிசாகத் தந்ததுபோல, இராமேசுவரம் என்ற இப்புகழ் பெற்ற தலம் இராம பற்றர்களுக்கும் அல்லாதாருக்கும் சேர்த்து ஒன்றாக ஒரு பரிசைத் தந்தது.. யாவரையும் உய்க்க அது தந்த பரிசு " கலாம்" என்னும் மாமேதையாம். என்றபடி.
கனிவுமனம் இனியமுகம் பனிகுளிர்ந்த நகையே
துணிவுபெறும் தொனியில்வரும் நனிசிறந்த குரலே
பணியிலுறும் அணியினொடு கணிதவறாப் புரிவே
இனியுலகில் நினைவில்பிற நனவில்வரல் உறுமோ
துணிவு பெறும் - கேட்போர் துணிச்சல் பெறும்படியக .
நனி = நல்ல.
நகையே - சிரிப்பே
பணியிலுறும் அணி - வேலையில் ஈடுபடும் அவர்தம் குழுவினர்.
கணிதவறா - கணிப்பில் தவறாத (. துணைக்கோளம் , ஏவுகணை முதலியன செய்து மேல் எழுப்ப, கணக்கு நன்கு போடவேண்டும். தவறக்கூடாது. இதில் கலாம் வல்லவர். )
புரிவே - செயல் புரிதலே.
இனியுலகில் நினைவில் : இனி அவர் நம் நினைவிலேயே வாழ்பவர்.
பிற - மற்றபடி.
நனவில் வரல் உறுமோ - உண்மை வாழ்வில் மீண்டு வந்து தோன்றுதல் கூடுமோ என்றவாறு.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.