யுவான் நல்ல வாட்ட சாட்டமான சீன இளைஞன். யூக்கியூவில் மருத்துவத்துறையில் பயின்றுகொண்டிருந்தான். அதே பலகலைக் கழகத்தில் சட்டத்துறை மாணவி லின். இருவரும் படித்துமுடித்தபின் வேலையிலமர்ந்து திருமணம் செய்துகொள்ள வேண்டிய வயதை அடையக் கொஞ்சகாலமே காத்திருக்க வேண்டியவர்கள்.
யுவானின் தந்தை மகன் தங்கிப் படிப்பதற்காக ஒரு வீட்டையே வாங்கிக் கொடுத்திருந்தான். இரண்டுமாடி வீடு. பல அறைகள். ஓர் அறையிலேதான் யுவான் குடியிருப்பு. மற்றவை எல்லாம் ஆளில்லாமல் கிடந்தபடியால், மாணவ மாணவிகள் சிலரிடம் அறைகளை வாடகைக்கு விட்டிருந்தான்.
வீடு திரும்பும்போது லின் யுவானுடன் கூடவே வந்து, சமையலறை முதலியவற்றைச் கூட்டிப் பெருக்கிக் குப்பைகளைக்
களைந்துவிட்டு கொஞ்சம் தே நீர் அருந்துவாள். அப்புறம் சில வேளைகளில் வாடகை வண்டியில் தன் இருப்பிடம் போய்விடுவாள். இல்லாவிட்டால் உடற்பயிற்சி என்று சொல்லிக்கொண்டு, நடந்தேகூடத்
தன் இடத்திற்குப் போய்விடுவாள்.
அழகான ஆடவனுக்கு அழகிய காதலி என்று மற்ற மாணவர்கள் பேசிக்கொண்டார்கள். அதிலும் லின், பால் நிறத்து வெள்ளை யழகி.
அங்கு வந்து யுவானுக்கு உதவிகள் செய்துவிட்டு அவன் அறையில்
கொஞ்ச நேரம் இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். வீடு எப்படியெல்லாம் அழகாக இருக்கவேண்டும் என்ற தன் கனவுகளையெல்லாம் அப்போது அவள் அவனிடம் விவரிப்பாள். யுவான் பெரும்பாலும் பதில் கூறாமல் கேட்டுக்கொண்டிருப்பான்.
காதலிக்க வேண்டும். அந்தச் சமயத்தில், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். போதுமான வசதிகளுடன் ஓர் இல்லம் அமைத்து குடும்பவாழ்க்கையில் ஈடுபடவேண்டும். பெற்றோர் பக்கத்திலிருந்து வாழ்த்துரைகள் வழங்கி மகிழ்விக்கவேண்டும். பட்டங்கள் பெற்று வேலைக்கமர்ந்தவுடன் இதெல்லாம் இடர் ஏதுமின்றி நடைபெறவெண்டியவை
ஒரு நாள் தன் கனவுகளைப் பட்டியலிட்டுக் கொண்டு அவனறையில் அவன்முன் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் லின். கனவுகளா? அவைகளெல்லாம் யுவானுக்கு எதிர்பார்ப்புகளாகவே இருந்தன. தேனீர்க் குவளையைக் கழுவி அடுக்கிவைப்பதில் என்ன கனவு இருக்கிறது? இது அவனுக்குக் கொஞ்சம் அதிகமாகவே பட்டது.
"லின், உனக்குத் தேர்வு நெருங்கிவிட்டதல்லவா? உலகில் எது கிடைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. பாடங்களை மீண்டும் ஒரு முறை
படிக்கவேண்டுமே,,,,"
இப்படிச் சொல்லி லின்னை வீட்டுக்கு விரைவாக அனுப்பி வைத்தான்
யுவான். அப்புறம் தன் பாடங்கள்....
ஒரு நாள் அவன் கேட்கச் சென்ற மருத்துவச் சொற்பொழிவுகள் முடியும் வரை லின் வெளியில் மண்டபத்தில் காத்திருந்தாள்.
பொழிவுமுடிந்து அவன் வந்தான். " லின், இன்று நீ வீட்டுக்குப்
போகிறாயா..... எனக்கு அவசர வேலை.... நான் வீடு போக நேரம் ஆகும்..." என்று மன்னிப்பு வேண்டியபடி யுவான் கிளம்பிவிட்டான்.
சந்திப்புகள் தொடர்ந்தால்தானே காதல் மொட்டு பூக்கும்?
தொடரும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.