Pages

சனி, 24 ஜனவரி, 2015

அகவாசம் - சகவாசம்

ஓரிடத்துப்  பதிவாய் இருத்தலே  அவ்விடத்து வதிதலாகும்.  பதிதல் > வதிதல்.
தகரம் கொண்ட சொற்கள்  சகரமாய்த் திரிதல் உடையன.   வதி > வசி  ஆகும்.  (கொது > கொசு ).
அதுபின் முதனிலை நீண்டு அம்  விகுதி பெற்று வாசம் ஆகும்.

அகரம் மற்றும் அதன் வருக்க எழுத்துக்கள் முதலாகியவை  பின்னர் சகர முதலாகவோ சகர வருக்கங்கள் முதலாகவோ திரிந்துவிட்டன என்பது முன் என் இடுகைகளில் விளக்கப்பட்டுள்ளன. அங்குக் காணவும்.  உதாரணத்துக்காக 1   ஒன்று மட்டும் நோக்குவாம் .

அட்டி >  சட்டி ;  (அடுதல் = சுடுதல் ;  அடு+ இ = அட்டி)

இங்ஙனமே அகவாசம் என்பதும் சகவாசம்  ஆகிற்று.  அ > ச.  பின்  சகம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டுத்  தனிச் சொல்லாகிவிட்டது. சகக்  களத்தி  என்பவள் உண்மையில் அகக் களத்தி தான்.   முதலில் வீட்டுக்குள்ளேயே இரண்டாவதாக நிற்பவளைக் குறித்தது,  பின் வெளியில் இரண்டாவதானவளையும் சுட்டியது.   இது அகம் என்பதன் பொருள் விரிதலே யன்றி வேறில்லை.

அகக் களத்தி > சகக் களத்தி (பின் சக்களத்தி > சக்கா ளேத்தி )

சகரத்தை அடுத்த க ச ட த ப ற , எப்படியெல்லாம் திரியும்?   சறுக்கரம் > சக்கரம் முன்போர் இணைய தளத்தில் கூறியுள்ளேன். சக்கரம் அறியுமுன் சறுக்கிச் சென்றவன் மனிதன் .












1(உது = முன் நிற்பது; ஆர்தல்= நிறைவு ; அம் = விகுதி )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.