Pages

வியாழன், 22 ஜனவரி, 2015

என்னை நாடிவந்த குருவி

எங்கெங்கோ பறந்து சென்றாய் 
இரைதேடி  அலுத்துவிட்டாய் ;
இங்கிந்த அறைக்குள் உண்ண
இருக்குமோ எனவே எண்ணி 
பங்கொன்று விழைந்து வந்தாய் !
பணிவோடு பதுங்கி நின்றாய்!
தங்கென்றன் நண்பன் ஆக!
தருவேன் நான் சுவையாய் உண்ண.

அரிசியை  எடுத்தேன் கொண்டு 
அருகினில் இடுதல் முன்பே,,
பெருகிய நடுக்கம் யாதோ 
பேடிமை உடுக்கும் உள்ளம் 
உருகிய எனக்கே நீயும் 
ஒளிந்தனை  விரித்துக் காட்டிச் ,
சிறகினைப் பரப்பிக்  காற்றில் 
 பறந்திடல் முறையோ சொல்வாய்!.

பேடிமை -  அச்சம்;  உடுக்கும் -  அடைந்த; கொண்ட .  ஒளிந்தனை  ஆதலின் 

பேடிமை உள்ளம் விரித்துக் காட்டிப் பின் பற ந்தனை;  என்று இணைக்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.