Pages

புதன், 21 ஜனவரி, 2015

பொருள்மொழிக் காஞ்சித் துறை

புறப் பொருள் இலக்கணத்தில் ஏனைத் திணை துறைகளில் அடங்காதன சில, பொதுவியலில் கூறப்படும்.  அவற்றுள் ஒன்று "பொருள்மொழிக் காஞ்சி"
என்னும்  துறை ஆகும். இதற்கான கொளு வருமாறு:

"எரிந்து இலங்கும் சடைமுடி முனிவர்
புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று."    பு.வெ .மா .

அறிஞர் ஆய்ந்துகண்டதனைப் புலவன் தன் பாடலில் கூறுவானாகில்,  அப்பாடல் பொருள்மொழிக் காஞ்சித் துறைப் பாற்படும். பொதுவியல் திணை.

தன்மூப்பாய் ஓடாமல் தக்கோர் உனக்குரைத்த
சொன்முயன் றன்பேதன்   சொந்தமாய் --- முன்கொண்டே 
இவ்வுலகு நீங்கும் இறுதிவரை நீவாழ்வாய்
செவ்விய வாழ்வதே சீர்.

இத்துறைக்கு யான்   தரும் பாடல் இது.

நம் அற நூல்களில் பலவும் இத்துறைப் பாடல்களைக் கொண்டுள்ளன.

கொளு :  விளக்க எடுத்துக்கொண்ட பொருளைச்  சுருக்கமாகத்  தன்னகத்துக் கொண்டிருக்கும் வரிகளைக் கொண்ட பாடல்.  a gist stanza.
மொழிந்தன்று:  மொழிந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.