Pages

புதன், 22 அக்டோபர், 2014

நரகாசுரன் கண்ணனின் மகன்

தீபாவளி வரும்போதெல்லாம் கண்ணன் மட்டுமா?  நரகாசுரனும்  கூடவே நினைவுக்கு வந்துவிடுவான்.  நாசமாகிப்போன நரகாசுரன் இல்லாமல் கண்ணனை மட்டும் நினக்கலா மென்றால் இயலவில்லை.


நரகாசுரன் கண்ணனின் மகன் என்பர்,  கண்ணன் நீரின் அமைப்பு.  (அம்சம்),  நீரில் தோன்றுவது சூறாவளி. இந்தச் சூறாவளி கடலின்றே பிறந்ததால்,  அது கடல் வண்ணனாகிய கண்ணனின் மகன் ஆகிறான் . நீரக சூறாவளி => நரகா  சூரன்> நரகாசுரன்  ஆனான்,  இயற்கையே உருவகம் செய்யப் பட்டுள்ளது காணலாம்.
உலகை அழிக்க முயலும் சூறாவளியை அதை ஈன்ற  கடலே அடக்கி அழித்து மனித குலத்தைக்  காக்கிறது,  அடிக்கடி சூறாவளி தோன்றாமல் காக்கிறது.

நரகாசுரனை அடையாளம் தெரிகிறதா?  நீரகம் >  நீரகா > நாரகா  > நரகா.
சூறா (வளி) >  சூர  > சூரன்.
இதிலிருக்கின்ற இறுதிச்சொல்  அசுரன் என்பதன்று.  நரகத்தில் உள்ள அசுரன் என்று பொருள் கொள்வதானால்,   அவன் நரகத்திலிருந்து பூமிக்குத்  திரும்பி வந்தவன்  என்று கொள்வதா?  அது கடவுளின் வல்லமைக்கு ஓர் இழுக்கு ஆகும்.  அவன் நரகத்திலிருந்து பூமிக்குப் புறப்படும்போதே அவனைக் கடவுள் கதையை முடித்திருக்க வேண்டுமே!  அசுரர்களெல்லாம்  நரகத்தில் மீளா நிலை எய்திக் கிடக்கையில் இவன் ஒருவன் மட்டும் மீண்டானா?   ஆகவே அது பொருத்தமற்ற சொல் பிரிப்பு.


உடலினும் உயரியதும் பெரியதும் ஆவது ஆத்துமா தான்.  அது உடலின் உள்ளிருப்பதாக  உணரப்படுவது. அது அகத்து ( உள்ளில் உள்ள)  மா - பெரியது ஆகும். அதுபின் ஆத்துமா  > ஆத்மா.  ஆன் மா என்பதில் ஆன் - பசு என்பதும் உண்டு, பதியும் பசுவும்  இறையும் பற்றனும் (ஆத்மாவும்)  ஆகும் என்பர்.  மா என்பதற்கு வேறு பொருள்களும்  உள.

ஆத்மன் என்றொரு சொல்வடிவும் ,உள்ளது.  அகத்தே மன்னி நிற்பது அகத்துமன் = >  ஆத்துமன் > ஆத்மன்.  தமிழ்ச்  சொற்களையோ மூலங்களையோ  செதுக்கிப் பார்த்தால்  அது சமஸ்கிருதமாகிவிடுகிறது.  மன்னுதல் -  நிலைபெறுதல்.  வேறு பொருள்களுமுள.

-மன்   (ஆத்துமன்)  என்ற சொல்லிறுதியே -மா (ஆத்துமா) ஆகிற்று என்று வாதாட இடம் உண்டு.  உடலுக்கு உயிர் பெரிது ஆதலின்  - மா  இறுதியும் பொருத்தமே.  உடலில் நிலைகொண்டிருப்பதால் - மன்  இறுதியும் பொருத்தமே.

இங்ஙனம் கண்ணன் நம் உடலையும் நம் அகத்துமாவையும் காக்கிறான்,

Will edit. Some edit work of previous posts are also pending.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.