பண்பார் மக்கள் வந்து
பைந்தமிழால் தொழுதிடவே
அன்பால் மனங்கனிந்தே
அருள்புரியும் சிவதுர்க்கா!
உன்பால் வந்து மனம்
உருகித் தலைவணங்க
கண்பார்த் தருள்புரியும்
காளியம்மை மறுவுருவே!
மண்ணுமலை இலங்கிடவும்
மக்களின்வாழ் விலங்கிடவும்
எண்ணுமிரு தினங்களிலே
எழில்மணம் புரிந்திடுவாய்.
மங்கல அணிபெறுவாய்
மலர்மாலை பலபெறுவாய்,
சந்தனம் குங்குமமே
சார்த்துவர்புன் னகைபுரிவாய்.
மங்கல அணிமகிழும்
மங்கையர் புடைவரவே
தங்குவை தொழுவருனை
தருகதிரு வருளினிதே.
For the Sumangali Puja on 10.8.2014 at Potong Pasir Sivadurga Temple Singapore.
மண்ணுமலை - another name for this place "Potong Pasir". Potong = excavation. Pasir - sand.
Previously sand was being taken from this place. Now a modern estate.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.