வாயை முதலாக வைத்து வாழ்க்கைத் தொழில் நடத்தியவர்கள் பலர் ஆவர்.
குருமார்கள், ஓதுவார், வாத்தியார்கள். பாடகர்கள், -- இப்படிப் பலராவர்.
இதில் வாத்தியார் என்பது வாய் > வாய்த்தியார் > வாத்தியார் என்பது முன் ஓர் இடுகையில் விளக்கப்பட்டது.
உப + அத்தியாய > உபாத்தியாய என்று அமையும் சங்கதம் வேறு. இவர் வேதம் கற்பிப்பவர்.
அரசனைப புகழ்ந்து பாடுவோர் சங்க காலத்தில் இருந்தனர்.
இவர்கள் வாய்மொழி வாயர் எனப்பட்டனர்.
"வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்த " (பதிற்.4. 37. வரி 2).
வாயாற் பிழைப்போர் மக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.