இலாகா என்ற சொல்லின் தொடர்பில் இலவசம் என்ற சொல்லையும் நினைவு கூர்வது நலமென்று நினைக்கிறேன். இலவசம் என்னும் சொல்லினைப் பற்றி சில ஆண்டுகட்கு முன் எழுதியிருக்கிறேன்.
இலவசம் எனில் " இல்லாமல் வசமாவது". - என்ன இல்லாமல் ? என்ற கேள்விக்கு "விலை இல்லாமல்", "கட்டணம் இல்லாமல் " "காசு இல்லாமல்" என்றே எல்லாம் விரிக்கலாம். இது பொருள் கைமாற்றம் தொடர்பில் வரும் சொல் ஆதலால் வேறு ஏதும் இல்லாமல் என்று சொல்ல இயலாது.
வசம் என்பது வை என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது.
பை > பய் > பயல் > பயன் > பசன் >பசங்க
பை> பையல் > பையன் .
பையலோடிணங்கேல் என்பது ஆத்திசூடி.
இந்த மாதிரி திரிபுதான் இது.
வை > வய் > வயம் > வசம்.
ஓன்று (உங்கள் ) வசமிருக்கிறது என்றால் அதை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
இல் > இல்+வசம் > இ (ல் +அ ) வசம் > இலவசம்.
இடையில் ஒரு அகரம் தோன்றிவிட்டது. சிலருக்கு அதனால் மூளை திசை மாறிவிடுகிறதோ?
இலாகா என்பதில் உள்ள இல் house குறிக்கும் .
இலவசம் என்பதில் உள்ள இல் no, without குறிக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.