முன் இடுகையின் தொடர்ச்சி
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_24.html
மெய் பனி கூரா அணங்கு எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போல
திறைகொண்டு பெயர்தி! வாழ்க நின் ஊழி !
உரவரும் மடவரும் அறிவுதெரிந் தெண்ணி
அறிந்தனை ! அருளாய் ஆயின்
யார் இவண் நெடுந்தகை ? வழுமோரே!
.................. ...................................
பொங்கு பிசிர் நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினம்கெழு குரிசில் ! நின் உடற்றிசினோர்க்கே ! -
===================================================================
மெய் பனி கூரா - உடம்பில் பனி படாத;
அணங்கு - தேவதை; பராவலின் கும்பிடுதலின் போது நடப்பதுபோல
பலி கொண்டு - இடப்படும் பலியைப் பெற்றுக்கொண்டு;
பெயரும் - திரும்பும்
பாசம் போல - இயல்பு போல (மனப் பிணைப்பைப் போல)
பலி பூசை செய்வோனுக்கும் தேவதைக்கும் இடையில் ஒரு பாசம் ஏற்பட்டுவிடும் என்கிறார் புலவர்.
தேவதைக்குப் பனி படாத உடல், பூசை போடுகிறவனுடன் பாசப் பிணைப்பு.... (இது மந்திரவாதிகளைக் கேட்டறிய வேண்டியது.);
திறை கொண்டு - கப்பத்தை ஏற்றுக்கொண்டு
பெயர்தி - திரும்பி வந்துவிடு.
வாழ்க நின் ஊழி - உன் ஆட்சியும் உன் பின்னோர் ஆட்சியும் வாழ்க
உரவர் - திறனுடையோர்'
மடவரும் - பெண்டிரும் அல்லது திறனிலாரும்;
அறிவுதெரிந் தெண்ணி - நன்கு வேறுபாடு கண்டு சிந்தித்து
அறிந்தனை - இனம் புரிந்துகொண்டாய் .
அருளாய் ஆயின் - நீ அருள் செய்யவில்லை என்றால்;
யார் இவண் நெடுந்தகை - பெருந்தன்மை உடையோன் இங்கு /யார்?;
வழுமோரே - நாம் யாவரும் வாழ்வோரே ஆவோம்
பொங்கு பிசிர் = மிக்க மழை
நுடக்கிய - பெய்து (முடக்கிய பின் )
செஞ்சுடர் நிகழ்வின் - கதிரவன் ;வருங்கால்
மடங்கல் தீயின் அனையை - யுகத் தீயினைப் போன்றவன் நீ
இரும்பொறையின் வெற்றியுடன், ஓர் ஊழி முடிந்து இன்னொன்று தொடங்குகிறது என்கிறார் புலவர். யாவும் முடக்கிய பெரு மழை. கதிரவன் தோன்றியகாலை பெருந்தீ முதலிய இது குறித்தது என்க .
சினம் கெழு குரிசில் --- வீறு கொண்ட தலைவனே நீ !
உடற்றிசினினோர்க்கே -- உனக்கு இந்த சீண்டுதலைத் தந்தவர்களுக்குத்தாம்.
அரிசில் கிழார் மாந்திரீகம் கற்றவர்போலும்.

Edited. Will review.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.