இணையற்ற ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பிருந்தும் சொற்கள் திரிந்துவந்துள்ளன. அவர்காலத்தில் பிற ஆசிரியரும் மாணவரும் அறிந்துகொள்ள விரும்பிய சொற்கள் சிலவற்றுக்கு அவர் விளக்க நூற்பாக்கள் எழுதினார் என்பதை அவர் நூலில் அறிந்துகொள்ளலாம்.
அவர் விளக்கியவற்றுள் ஒன்று: அகம் +கை என்ற இரு சொற்கள் புணர்ந்தால் எப்படி வருமென்பது.
அகம் என் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான
(தொல் எழுத் 315)
ஒழிய - தவிர; முன்னவை - (கை என்னும் சொல்லுக்கு ) முன்னின்றவை.
அகம் + கை = அங்கை என்று வரும்.
இங்ஙனமின்றி, அகங்கை என்றும் வரும்.
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான :
ஙகர ஒற்றாகிய மெல்லெழுத்து ஈரிடத்தும் தோன்றும் என்பது பொருள்.
அங்கை என்பதில் ககரம் காணாமற் போயிற்று என்பதறிக
ஆசிரியர்க்க என்பது அச்சுப் படியில் உள்ளது. ஆசிரியர்க்கு என்பது போலும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.