சேமித்தல் என்ற சொல், சேர் என்பதனடியாகப் பிறந்த சொல்லே ஆகும். சேமித்தல் அமைந்த விதமாவது:
சேர் > சேர்மி > சேமி > சேமித்தல், (ரகர மெய் மறைவு)
இதேபோல் நேமித்தல் என்பதும்.
நேர் > நேர்மி > நேமி > நேமித்தல். இதுபின் நியமித்தல் என்று திருத்தி அமைக்கப்பட்டது. நில் > நி > நிய > நியமி > நியமித்தல் என்றும் கூறுப.
ஒரு > ஒருமி > ஒருமித்தல் இது ஓர்மித்தல் என்று வராத காரணம், மிகரத்தின் முன், ஒரு என்பது ஓர் என்று திரியாது.
நில் > நிரு > நிருமி > நிருமித்தல்.( நிற்கச்செய்தல், நிறுவுதல்.) /*
லகரம் <> ரகரம் ஒன்று மற்றொன்றாகத் திரியுமென்பதை மறக்கலாகாது. பல மொழிகளில் இது இயல்பு.
*இதை வேறு விதமாகக் கூறுவதாயின் :
நில் > நிலுமி > நிருமி > நிருமித்தல்.
இது இன்னோசை கருதிய திரிபு மட்டுமன்று, லு> ரு திரிபு முறைப்படியானதும் கூட. நில்> நிலுவை என்பது காண்க. இது நிருவை என்று திரியின், நிறுவை என்பதனுடன் குழம்பக் கூடும் ( மயங்குதல்).
ஒ ..நோ
நிலு > நிரு (மேற்படி )
கலு > கரு ( கலுழன் > கருடன் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.