பேச்சு வழக்குத் திரிபுகளாயினும், சில திரிபுகள் எப்போதும் நினைவிலிருத்திக்கொள்ளத் தக்கவை. இப்போது இவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
புரள் பிறழ்*. (ர <> ற; ள் <> ழ்). இவ்விரண்டு சொற்களும் இலக்கிய வழக்கிலும் பேச்சிலும் உள்ளன. இங்கு உ (பு) என்பது இ (பி) என்று மாறியுள்ளமை காணலாம்.
இனி:
சுண்ணாம்பு : சின்னாம்பு.
துன்னு : தின்னு.
புள்ள : பிள்ளை
புண்ணாக்கு : பிண்ணாக்கு.
புரளி : பிரளி, பெரளி.
இவற்றிலெல்லாம் , முதலெழுத்தில் (மெய்) நின்ற உகரம், இகரமாய்த் திரிதல் காணலாம். சோடிச் சொற்களில் ஒன்று பேச்சு வழக்கினது.
துலங்கு என்பதை நோக்கின், பொருள் ஒளிவீசுதல் என்பது புரியும். இலங்கு என்பதும் அதுவே.
உ <> இ துலங்கு <> இலங்கு.
து > தி; த் + உ > த் + இ
துலங்கு என்பதன் அடிச்சொல் துல என்பது. கு என்பது வினைச்சொல்லாக்க விகுதி.
துல > தில.
துலகு > திலகு > திலகம்.
நெற்றி துலங்குவதற்கும் ஒளிபெறுவதற்கும் இடுவது: பொட்டு.
திலகம் : ஒளி வீசும் பொருள் அல்லது ஆள். ஒளி பெரும்புகழுமாகும்.
அடிக்குறிப்பு:
* புரள் - பிறழ் : இவை ஒரே மூலத்திலிருந்து ஆனால் வெவ்வேறு அடிகளிலிருந்து பிறந்தவையாய் இருக்கக்கூடும். We would not delve into that for this submission.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.