Pages

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வருத்தகம் ...................

யப்பானியர் (ஜப்பானியர்)  தென்கிழகாசிய நாடுகளைக் கைப்பற்றி  யாண்ட காலங்களில் தடுப்புக் கைதிகளைத் துன்புறுத்தும் நிலையங்கள் பல செயல்பட்டன வென்பர். பிடித்துக் கொணர்ந்து  வருத்தும் இவ்விடங்களை  "வருத்தகங்கள்"  எனின் எத்துணைப் பொருத்தம் என்று சொல்லவும் வேண்டுமோ?  (torture chambers)

வருத்து  + அகம் =  வருத்தகம். எனல் பொருத்தமே. ஆனாலும் இவற்றை யாரும் இப்படிக்  குறித்ததாக யான் அறியேன். 

ஆனால்  நான்  கூற விழைந்தது  இவை பற்றி அல்ல.

ஏற்றுமதி - இறக்குமதி சரக்குகள் மாற்று வணிகத்தில் பயன் பெறும் "வர்த்தகம் "   என்னும் சொல்லே நாம்  ஆயப்   புகும் சொல்லாம்.

போக்குவரத்து  என்னும் சொல்லை நோக்குங்கள்.  இதில் "வரு "(வருதல்) என்பதில் உள்ள "ரு "    சொல்லாக்கத்தில் "ர " என்று  திரிந்துள்ளது. ஆக, ரகர ஒற்றின் மேலேறிய உகரம் கெட்டு அகரம்  வந்துற்றது.  எனவே பொருள்களை வருவித்தல் என்னும் பொருளில்  "பொருள் வரத்து" எனப்பட்டது. இது பேச்சு வழக்கில் சொல்லப்படுவது  ஆகும்.

இந்த   வரத்திலிருந்து அமைந்ததே வரத்தகம். அதுபின் "வர்த்தகம் " என்று அழகு படுத்தப்பட்டது.  ( word polishing).  இதன்மூலம் அது  வரு என்னும் மூலத்தை உடையது என்பதை மறந்து   தடையின்றிப்  பயன்படுத்தவும் ஒரு வாய்ப்பு நல்கப்பட்டது.

குறிப்பு:

வரம்+ அத்து +இல்+ இருந்து  =  வரத்திலிருந்து.  (அத்து -  சாரியை)
வரத்து +  இல் + இருந்து.=  வரத்திலிருந்து . (வரத்து -  சொற் பகுதி ,  இல் -  உருபு .இருந்து - சொல்லுருபு.)
வருத்து =  துன்புறுத்து என்பது.. .



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.