சில்லறை என்பதைக் கவனிப்போம்.
சில் என்பது சிறுமை குறிக்கும் ஓர் அடிச்சொல்.
அது சிந்து என்ற அழகிய சொல்லமையத் தன்னை ஈந்தது. அதை முன் இடுகையில் கண்டோம்.
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_996.html
சிறு என்பதும் சில் என்பதன் திரிபே.
"அந்த வெடிவிபத்தில் ஒரு சில் வந்து அவனைத் தாக்கிக் காயம் ஏற்படுத்தியது."
சில் - பெயர்ந்து வரும் சிறிய கல் .
சில் என்பது தானே ஒரு சொல்லாகவும் நிற்கும் ; ஏனைச் சொற்களுக்கு அடிச்சொல்லாகவும் வரும்.
சில் + அறு +ஐ = சில்லறை , சிறிது சிறிதாய் "அறுக்கப்" பட்டதென்று பொருள் .
Room எனப் பொருள் படும் அறை என்பதும் "அறுக்கப் " பட்டதென்றெ பொருள்தரும் .
குறிப்பு:
அர்த்த - இது பாதி என்று பொருள் தரும். இதுவும் "அறுத்த" என்பதன் திரிபே என்று தமிழறிஞர் சிலர் கருத்துரைத்துள்ளனர். எ-டு : அர்த்தயாமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.