தமிழில் பல விகுதிகள் அல்லது சொல்லீறுகள் பொருளிழந்து வெறும் சொல்லமைப்புக்காக அல்லது சொற்களை வேறுபடுத்துவதற்காகப் பயன்படும் துணுக்குகள் என்பது ஓரளவு உண்மையென்றாலும் அதுவே முழு உண்மை என்று கூறிவிட முடியாது.
அணிமை, அண்மை. அருமை.அறியாமை என்றெல்லாம் வரும் பல சொற்களை ஆய்வு செய்த அறிஞர்கள் அவற்றில் வரும் "மை" விகுதி உண்மையில் "மெய் " என்பதன் திரிபு என்றனர். மெய் எனின் உடல். அது அப்புறம் "மை " ஆகிவிட்டது.(1)
அது "மை" ஆனபின் சொல்லமைப்பு மேற்கொள்வதற்கு மனத்தில் ஏதும் தடை தோன்றுவதில்லை. வேண்டியவர் விழைந்தபடி சொற்களை அமைக்கும் வசதி உண்டானது போலும். தனிமை, தன்மை இனிமை. ஆளுமை என்றெல்லாம் பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் அமைத்துக்கொள்ள திறந்த வெளி உருவாயிற்று.
இனிமை + தமிழ் = இன்+ தமிழ் = இன்றமிழ். இது இனிதாய் அமைந்த சொல்.
இனிய தமிழ் என்று பொருள், (2) "இளைஞருக்கான இன்றமிழ் " ஒரு நூலின் பெயர். இதை வேறொன்றன் தொடர்பில் வேறு வழியில் "இனிமைத் தமிழ்" என்றால் நன்றாக இருக்கும் என்றும் அறிஞர் (3) பின் கருதினர். ஆனால். பவணந்தி முனிவர் "மை" விகுதி கெடுத்துப் புணர்க்க வேண்டுமென்று விதி செய்தார். (4) எனவே "இன்றமிழ் " என்பதுதான் அவர்க்குப் பொருந்திய வடிவம். எதுவும் தவறன்று. எனினும் "மை" என்பது ஒரு பொருளைக் குறிக்கையில் அதைக் கெடுத்துப் புணத்துதல் கூடாது. கண் மை தருக என்பதை கண்தருக என்றால் எப்படி? இங்கு மை விகுதியன்று.
இணையம், கணையம் என்றெல்லாம் வரும்பல சொற்களில் அம் விகுதி சேர்கின்றது.
"அம்" என்பது முன் காலத்தில் அமைப்பு என்று பொருள்தரும் ஓர் ஈறு எனலாம். அமைப்பு என்பதன் அடிச்சொல் அதுவேயாகும்.
அம் > அமை .
அம் > அமுக்கு.
அம் > அமிழ்
அம் > அமர் (விரும்பு )
அம் > அமர்தல்
அம் > அமர்த்து
அம் > அமர்ப்பித்தல் (> சமர்ப்பித்தல்)
அம் > அம்மி
அம் > அம்பு
etc. etc
In all these words,you can see that a dynamic force seems to be acting on a static force .
அம் அழகு என்றும் பொருள். சீன மொழியில் மரியாதைக்குரிய பாட்டி என்றும் பொருள்.
அம் விகுதி தமிழ் மொழிக்குப் பொருத்தமானது ; சமஸ்கிருதத்திற்கு இன்றியமையாததன்று. அப்ஹிதம் , அபாலம் என சொற்களில் வருமெனினும் வேதா யோகா என அம் இல்லாமலே ஆகும்.
Notes:
(1) மு.வரதராசனார் , (2) நிறைதமிழாய்ந்த மறைமலையடிகளார்.
(3) பாரதிதாசன். (4) நன்னூல் (இலக்கணம்).
இன்று+ அமிழ் = இன்றமிழ் என்றும் வரும். "இன்றைக்கு மூழ்கிவிடு" என்றும் பொருள் தருமேனும் இடம் நோக்கிப் பொருள் கொள்ளல் வேண்டும்.
இன் = இனிமை; இன்னா = துன்பம் தருகிற, தருவன , இனிமை இல்லாத(வை), .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.