நஞ்சு அல்லது உண்ணக் கொல்லும் பொருள் பலவகை, சில பச்சையாகவே உண்டு சாவினை வரவழைத்துக் கொள்ளும் திறம் தருவதாம் இதற்குரிய சொல் :
பச்சைநஞ்சு என்பதாம்,
பச்சைநாவி என்பது இன்னொரு நஞ்சின் பெயர் .(aconite)
இனி பாசாணம் (பாஷாணம் ) என்ற சொல் எங்ஙனம் அமைந்தது.?
ஆணம் என்பது குழம்பு போல் காய்ச்சப்படுவது.
பசுமை + ஆணம் = ; பாசாணம் .> பாஷாணம். (இங்கு முதனிலை நீண்டுள்ளது )
(இன்னோர் எடுத்துக்காட்டு பசுமை + இலை = பாசிலை.)
அதாவது பச்சிலையை அவித்தெடுத்த நஞ்சு அல்லது நஞ்சுக் குழம்பு என்பதாம்.
இப்போது இது பொதுப்பொருளில் வழங்குகிறது,
காய்கறிக் குழம்பைப் "பச்சைக் கறி " என்பது மலையாள வழக்கு.
பாஷாணம் என்ற சொல் சமஸ்கிருத அகரமுதலியில் காணப்படவில்லை.
Poison என்ற ஆங்கிலச் சொல், ஒரு குடிக்கும் நீர்ப்பொருள் என்று பொருள்படும் சொல்லினின்று வந்ததாகக் கூறுவர்.:-
(potion, , a portion of a drink, a drink in general.
குடிக்கத் தரப்படுவது (=gift) என்று பொருள்தரும் சொல்லிலிருந்து பல ஐரோப்பிய மொழிகளில் இதற்குச் சொல் அமைந்துள்ளதென்பர்.
தமிழில் " பச்சிலை", "வேகவைத்தல்" முதலிய கருத்துகளின் அடிப்படையிலேயே சொல் அமைந்துள்ளது.
மலாய்மொழியிலும் பல தமிழ்ச்சொற்கள் வழங்குகின்றன.
பாசாணம் குறிக்கும் ராச்சூண் என்னும் மலாய்ச்சொல்,
அரைச்சுண் (அரைச்சு உண்) என்பதன் திரிபு போல் தோன்றுகிறது. இது மேலும் ஆராய்வதற்குரியது. தற்கொலை செய்துகொள்வோருள், பச்சிலைகளை அரைத்து உண்டு மாண்டவர்கள் பலர்.
Poison என்ற ஆங்கிலமும் பாசாணம் ("பாyசாண்") என்பதனோடு சற்று ஒலியொற்றுமை உடையதே.
இவற்றைப்பற்றி இங்கு ஏதும் கருத்துக் கூற முற்படவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.