ஒரு பூவின் கெஞ்சுதல்.
அழகான ஆரிய மலர்நானே
அடுத்து நீ வந்திடு பொன்வண்டே!
பழகாமல் தேன்தனைப் பருகாமல்
பறந்துநீ தாண்டியே சென்றிடாதே.
பலகாலம் உனக்கே பூத்திருந்து
பசுந்தேனை வைத்தே காத்திருந்து
சிலநிமைய மாகிலும அமைந்திடாமல்
செல்வாயோ பூீ மனம் குமைந்திடாதோ!
வாராது போயின் வனத்துக்காரன்
வந்தென்னைக் கொய்துதன் அகத்துக்காரி
தேராத கூந்தலுக் கியைத்துக்கொண்டால்
தேன்போகும் வாழ்வுமே வீண்போகாதோ?
அவள்கொண்டை மேலே சென்றுகாய்ந்தே
அழிந்திடாமல் நீதேன் அருந்திடாயோ?
தவழரிய இதழ்களில் தவழ்ந்துவாராய்!
தனிமதுவை நீதான் உவந்துதேராய்!
===============================================
ஆரிய = மென்மைமிக்க (little, delicate), ஆர்தல்: நிறைதல்,,மனநிறைவுபெறுதல், அனுபவித்தல், தங்குதல் எனப் பல
பொருள்தருவது, ஆர் + இய). ் நிமையம் = நிமிடம். குமைந்திடாதோ = நெஞ்சமழிந்திடாதோ; தவழரிய் = பிற வண்டுகள் தவழ்தற்கு அரிய அல்லது முடியாத; தனி மது = தன்னேரிலாத அல்லது ஒப்பற்ற சுவைத் தேன். தேராய் = தேர்ந்தெடுத்துக்கொள்வாய்.். .
தேராத கூந்தல் - இங்கு இப் பூவினால் விழைந்து ஏற்றுக்-
கொள்ளப்ப்டாத (தோட்டக்காரன் மனைவியின்) கூந்தல்
என்பதை வலியுறுத்தும்பொருட்டு. (not sought by the flower to be worn )
மது - இங்கு தேன் என்று பொருள். மலேசிய மொழியிலும்
இதுவே பொருள். ("Madu" in Malaysian and Indonesian languages)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.