Pages

▼

திங்கள், 5 அக்டோபர், 2026

ரகரம் மறைந்த சொற்கள். எ-டு பிரிதல்>பிய்தல்

பிரி என்ற வினைப்பகுதி, பிய் என்றும் திரிபு கொள்ளும்.   மரி என்ற வினைப்பகுதி ,  மாய் என்று திரிந்துவிடும். பரிதல் என்பது அன்பொடு பேசுதல் என்பதே எனினும்,  பயில்(தல்), என்பதில் இப்பொருளைக் காட்டுவதுடன், பாசம் என்பதில் தொடர்பு காட்டுகிறது.  பயி(ல்), (பாயி) > ( பாயம்) >  பாசம் என்று தொடர்பு காணலாம்.

பரி(தல்) என்பது  அறுத்தல், அன்பு, அன்போடு. பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்துபேசு தல், வெட்டுதல் எனப் பல்பொருளது ஆகும்.

சில சொற்கள் திரிந்து உருமாறிவிட்டாலும் நம்மிடம் உள்ள அளவைகளால் நாம் அவற்றைக் கண்டுபிடித்துவிட முடிகிறது.

மரி -மய் -   மை > மையம்  (  சுடுகாடு)..   இப்போது மரி என்பது மய் என்று திரிந்தபின், மை> மையம் என்றாகி,  புதைக்கும் அல்லது எரியூட்டிடத்தைக் குறிக்க வழங்கியது.

 உரிதல் உய்த்தல் தொடர்பு முழுதும் இல்லாமலாகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. தோலுறிதலால் உய்வு பெறும் விலங்குகள் தாவரங்கள் உள. உரிமையே உய்வு தரும் என்பதனால் தொடர்பு காணப்பெறுகிறது.

You may also prefer:

 வாய் > வாய்த்தை> வார்த்தை. published on 9.5.2026

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



சனி, 3 அக்டோபர், 2026

பாரதி என்ற பட்டப்பெயர். இன்னொரு விளக்கம்

 பாரதி என்பது பெண்களின் பெயராகவும் உள்ளது.  இதற்குக் காரணம் இது கலைமகளின்(சரஸ்வதியின்) பெயராகவும் இருப்பதே.  அன்றியும்,  புலவர் என்ற பொருளிலும் வழங்கிவருகிறது.

பாக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஓர் இரதம் போன்றவர் (கவிஞர்), ஆதலின் பா+ ரதம்+ இ >  பா+ ரத் + இ > பாரதி என்றும் கூறலாம். (  A vehicle for good poems ).

இனி இன்னொரு விளக்கம்:

அறைதல் என்ற சொல்,  எடுத்துச்சொல்லுதல் என்றும் பொருள்தரும். இப்பொருளில் இது  அரட்டுதல், அரற்றுதல்  என்ற சொற்களின் அர் என்ற மூலவடியின் தொடர்பு உள்ள சொல்லுமாகும்.  அர்ச்சனை என்ற சொல்லில் ஒலியைக் குறிக்கும் அர் என்ற அடிச்சொல் உள்ளது.

மேலும் சொல்லாக்கத்தின் போது,  றை என்பது ரை என்றோ வருக்கமாகவோ மாறிவிடும் என்பதை யாம் எடுத்துக் காட்டியுள்ளோம். ஒலிக்குறிப்பு பற்றி எழுந்த சொற்களின் ஆய்வுரைகளை இங்கு வாசிக்கவும். இது பல முறை வந்துள்ளது.  குறிப்பு எடுத்துக்கொள்ளவும்.

பா+ அறை + தி >  பா ரை தி >  பாரதி  என்பது தமிழ் மூலம், --- ஆயும்போதும் புலவனைக் குறிக்கவல்லது  ஆகும். தி என்ற பெண்பால் விகுதி இங்கு வருவதனால்  '' கலைமகட்கு''  உரியது என்பது மையக் கருத்து ஆகும். ஐகாரக் குறுக்கம் பாக்களில் வருவதுபோல சொல்லமைப்பிலும் வரும் என்பது இங்கு நன்கு காட்டப்ப்பெற்றுள்ளது. 

ஐகாரக் குறுக்கம் என்பது ஐகாரம் அகரம்போல் ஒலித்தல்.  இது  குறைந்தொலித்தல். இங்கு றை என்பது ரை ஆனது,  பின் ரகரம் ஆயிற்று. ஒன்றுக்கு மேற்பட்ட திரிபுகள் ஆகும்.

சமஸ்கிருதம் என்பது  ''ஒப்பொலி'' மொழி ஆகும்.  ஒப்பு -  சமம்.  ஒலி -  கதம். கதமே கிருதம்.  சமம் கதம் > சமஸ் கிருதம். ஏன் கால்டுவெல்,  சமஸ்கிருதத்தை தன் ஆய்வில் ஏனைத் ''திராவிட''  மொழிகளுடன் ஒப்பிட்டு ஆயவில்லை?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 1 அக்டோபர், 2026

பணத்தி என்ற பெண்பால் சொல்.

 இந்தச் சொல்லை அறிந்துகொள்வோம். 

பறைச்சி யாவது ஏதடா பணத்தி யாவது ஏதடா என்று சித்தர்பாட்டில் வருகிறது.  முன்வந்த சொல்லால் பின்வருவது  பார்ப்பனத்தி என்ற சொல் என்பது தெளிவாகிறது.  இது இலக்கணத்தில் முதற்குறைச் சொல் எனப்படும்.  இது தொகுத்தல் என்றும் குறிப்பதுண்டு.  பனத்தி என்பது விரிந்த வழக்குடைய சொல்லாக இருந்தால்,  முதற்குறை என்னலாம்.  செய்யுள் இயற்றியவரே முதற்பகுதியைத் தொகுத்து ''பனத்தி'' என்று கவிதையில் வழங்கி இருந்தால் இதைத் தொகை என்றே குறிப்பர்.

பணமுடையவன்  ''பணன்'' என்று குறிக்கப்படுவதில்லை.  பனவன் என்ற சொல் உள்ளது.  இது ''பார்ப்பனவன்'' என்ற இன்னொரு ஆண்பால் வடிவத்தின் பெண்பாலாக, பனத்தி என்று வரும்.

பணத்தி என்பதும் பனத்தி என்பதும் ஒருபொருட்சொற்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை